உங்க போன் உங்க உரிமை சியோமி ரெட்மி நோட் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்

By Meganathan
|

நீங்க நினைப்பதை விட சியோமி மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரிய அச்சுறுதத்லாக இருக்கும். இந்த ஆண்டின் துவக்கத்தில் யாரும் இதை நம்பாத நிலையில் தற்போது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது சியோமி.

[ஆன்டிராய்டு போன்களை விட விண்டோஸ் போன் சிறந்தது]

பல சியோமி கருவிகளுல் ஒன்று தான் ரெட்மி நோட். ஏற்கனவே ரெட்மி 1எஸ் மற்றும் எம்ஐ3 மூலம் சியோமி நிருவனம் மொபைல் சந்தையில் பிரபலமாகிவிட்டது என்றே கூறலாம்.

உங்களில் பலர் ஏற்கனவே ரெட்மி நோட் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்திருப்பீர்கள், இப்போ இந்த போனை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்களை பாருங்க.

1

1

செட்டிங்ஸ் மெனுவை வேகமாக பயன்படுத்த டாகிள் டேபை கிழ் பக்கமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

2

2

அனைத்து சியோமி கருவிகளின் கேமராவிலும் ப்ரெத்யேகமாக QR ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. QR மூலம் நீங்க வைபையை ஷேர் செய்யவும் முடியும்.

3

3

ரெட்மி நோட்டில் டேட்டா பயன்படுத்துவது சுலபமாக முடிகிறது, செக்யூரிட்டி ஆப் சென்று டேட்டா யூசேஜ் க்ளிக் செய்து ரெஸ்ட்ரிக்ட் கொடுத்தால் தேவையான அளவு டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

4

4

ரெட்மி நோட்டில் பாப் விண்டோ மூலம் கீழ் இருந்து மேல் பக்கமாக பாப் அப் செய்தால் ஆப்ஸ்களை பாப் வடிவில் பார்க்க முடியும்.

5

5

மற்ற ஸ்மார்ட்போன்களில் தனியாக அப்ளிகேஷன் பயன்படுத்தினால் தான் நீங்க ப்ளாஷ் லைட் பயன்படுத்த முடியும், ஆனால் ரெட்மி நோட் உங்களுக்கு அந்த வேலையை வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹோம் பட்டனை கொஞ்ச நேரம் அழுத்தினால் ஸ்கிரீனில் லைட் ஆன் ஆகிவிடும், லைட்டை ஸ்விடிச் ஆப் செய்ய பவர் பட்டன் அழுத்த வேண்டும்.

6

6

MIUI மூலம் ப்ரைவேட் மெசேஜிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரும் இதை பயன்படுத்தாமல் இருக்க நீங்க பாஸ்வேர்டும் செட் செய்து கொள்ளலாம்.

7

7

சில சமயங்களில் வேகமாக கேமரா பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும், இதற்காக நீங்க செட்டிங்ஸ் - பட்டன் சென்று பேக் பட்டனை தொடர்ந்து அழுத்தி போட்டோ எடுக்கும் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யுங்கள், இப்போ பேக் பட்டனை ஷட்டர் சத்தம் கேட்கும் வரை அழுத்த வேண்டும்.

8

8

அப்ளிகேஷன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற ஸ்கிரீனை ஹோல்டு செய்து உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை நீங்க நினைக்கும் இடத்திற்கு மாற்றி வைத்து கொள்ளுங்கள்.

9

9

உங்க போனில் நிறைய ஆப்ஸ் இருந்தால் மெமரியை பாதுகாக்க சில ஆப்ஸ்களை லாக் செய்து கொள்ளும் வசதி ரெட்மி நோட்டில் இருக்கின்றது.

10

10

உங்க போனில் இருக்கும் ஜன்க் பைல்களை க்ளியர் செய்ய செக்யூரிட்டி ஆப் சென்று க்ளீனர் செல்க்ட் செய்து ஸ்டார்ட் ஸ்கேன் அன்டு க்ளீன் அப் கொடுங்கள்.

Best Mobiles in India

English summary
Xioami Redmi Note Top 10 Tips and Tricks You Need to Know. Check out some interesting and exciting Xioami Redmi Note Tips and Tricks.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X