இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சியாமியின் சிறப்பம்சங்கள்

இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சியாமியின் சிறப்பம்சங்கள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தனி இடம் பிடித்துள்ள சியாமி நிறுவனம், இந்தியாவில் அதிகளவு விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களில் 2வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வெறும் 3% இருந்த நிலையில் இந்த இந்த ஸ்மார்ட்போன் முதலாவது காலாண்டிலேயே 14% விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சியாமியின் சிறப்பம்ச

முதல் காலாண்டில் சுமார் 4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை சியாமி விற்பனை செய்து சாதனை செய்துள்ளதாக சிங்கப்பூர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான மாடல்கள் விற்பனை ஆகிவரும் நிலையில் அதிக விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சாம்சங் நிறுவனத்தை அடுத்து இருக்கும் சியாமி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் பணமதிப்பு ரத்து நடவடிக்கை காலம் தவிர மீதி காலங்களில் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது.

நோக்கியா, பிளாக்பெர்ரி போன்ற ஜாம்பவான் நிறுவனங்களால் கூட சாதிக்க முடியாத விற்பனையை கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து சியாமி நிறுவனம் இந்தியாவில் படிப்படியான வளர்ச்சியை பெற்று தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்

மாடல்களில் வித்தியாசம் காட்டிய சியாமி:

மாடல்களில் வித்தியாசம் காட்டிய சியாமி:

சியாமி நிறுவனம் முதலில் இந்திய மக்களிடம் இது சீனா தயாரிப்பு என்ற மனநிலையில் இருந்து வேறுபட வைத்தது. கடந்த 2013ஆம் ஆண்டு சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றாலே இந்தியர்கள் ஒதுங்கி போகும் வகையில் இருந்த மனநிலையை முதலில் தனது அசத்தலான டிசைன் மூலம் மாற்றியது.

2014ஆம் ஆண்டு இந்தியாவில் சியாமி நுழைந்தபோது 15%ஆக இருந்த விற்பனை சதவீதம் 2016ல் 50% ஆக மாற அதன் டிசைனும் ஒரு காரணம்

சரியான விலையில் அதிநவீன தொழில்நுட்பம்:

சரியான விலையில் அதிநவீன தொழில்நுட்பம்:

சியாமி நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் விலை. இதே டெக்னாலஜி பொருந்திய மற்ற நிறுவனங்களின் விலையை விட கிட்டத்தட்ட பாதி விலையில் சியாமி அளிக்க முன்வந்ததே இதன் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சியாமியின் வருகைக்கு பின்னர் சியாமியின் விலைக்கு தர ஒருசில நிறுவனங்கள் முன்வந்த போதிலும் அதில் வெற்றி கிடைக்கவில்லை

இஸ்ரோவின் புதிய சோழர் எலக்ட்ரானிக் கார்: விரைவில்.!இஸ்ரோவின் புதிய சோழர் எலக்ட்ரானிக் கார்: விரைவில்.!

சரியான விற்பனை முறை:

சரியான விற்பனை முறை:

சியாமியின் வெற்றியின் மற்றொரு முக்கிய காரணம் அதன் விற்பனை முறை. கடை கடையாக, ஷோரூம் ஷோரூமாக ஏறி இறங்காமல், பேரம் பேசாமல் ஆன்லைனில் எளிமையாக ஆர்டர் செய்து, பொருள் கைக்கு கிடைத்தவுடன் பணம் கொடுக்கும் வசதிதான் இந்த போனின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

ஒருவேளை மற்ற நிறுவனங்களை போல ரீடெயில் ஷோரூம்களில் இந்த போன்கள் விற்பனைக்கு வந்திருந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது என்றே கூறப்படுகிறது.

விளம்பர தந்திரம்:

விளம்பர தந்திரம்:

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைய வைத்த நிலையில் சியாமி நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்களே விளம்பரதாரர்களாக இருந்தனர்.

ஒருவர் ஒரு போனை வாங்கிவிட்டால் சமூக வலைத்தளங்கள் மூலம் பலருக்கு அதன் பெருமையை பரப்பினார். செலவில்லாமல் வாடிக்கையாளர்கள் செய்த விளம்பரமே இந்த நிறுவனத்தின் விளம்பர தந்திரங்களில் ஒன்றாக உள்ளது

தரமான தயாரிப்புகள்:

தரமான தயாரிப்புகள்:

சியாமி நிறுவனம் இதுவரை வெளியிட்ட ரெட்மி மற்றும் மீ சீரிஸ் மாடல்களில் எதுவுமே தோல்வி அடையவில்லை என்பது இந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளுக்கு சான்றாக உள்ளது. தரமான தயாரிப்புகள், சரியான விலை இருந்ததால் இந்த நிறுவனம் சீன நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடிக்க காரணமாக இருந்தது என்று கூறினால் அது மிகையில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi is the second largest smartphone brand in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X