உறுதியானது விலை, நாளை முதல் - சியோமி ரெட்மீ 4 எக்ஸ்.!

'சீன ஆப்பிள்' நிறுவனம் என்று அழைக்கப்படும் சியோமி அதன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் விலையை வெளியியிட்டுள்ளது.

Written By:

கடந்த வாரம் எந்த விதமான விலை நிர்ண்ய தகவலும் இன்றி சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ வரிசையிலான நோட் 4 எக்ஸ் கருவி சார்ந்த உத்தியோகபூர்வமாக அம்சங்களை அறிவித்தது. இப்போது, 'சீன ஆப்பிள்' நிறுவனம் என்று அழைக்கப்படும் சியோமி அதன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் விலையை வெளியியிட்டுள்ளது மற்றும் அது காதலர் தினம் (நாள்) விற்பனைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கருவி சார்ந்து இதுவரை வெளியான அனைத்து அதிகார்ப்பூர்வ தகவல்கள் மற்றும் இக்கருவியின் விலை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே, ரேம்

சியோமி ரெட்மீ 4 எக்ஸ் அம்சங்கள் சார்ந்து கிடைத்த தகவல்களை பொறுத்தவரை இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஒரு ஸ்னாப்டிராகன் 635 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.

சேமிப்பு

கருவியின் உள்ளடங்கிய சேமிப்பு வகைகளை பொறுத்தவரை 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி வகைகளை கொண்டிருக்கலாம் மற்றும் 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீடிக்கும் ஆதரவும் கொண்டிருக்கலாம்.

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.!

பேட்டரி

உடன் ஒரு 4100எம்ஏஎச் பேட்டரி, ஒரு கைரேகை சென்சார் அளவீடுகளில் 151x76.3x8.54மிமீ, 176.54 கிராம் எடையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.

விலை

அதிகாரப்பூர்வ விலை நிர்ணயத்தின் கீழ் இக்கருவியின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புமாறுபாடு சுமார் ரூ.9,700/-க்கும் மற்றும் ஹட்சுனி சிறப்பு பதிப்பு சுமார் ரூ.12,600/-க்கும் விற்பனைக்கு வரும்.

விற்பனை

மேட் பிளாக், செர்ரி பவுடர், சாம்பல் மற்றும் தங்கம் ஆகிய வண்ணங்களில் வெளியாகும் ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவியானது சீன விற்பனையாளர்களின் ஒரு பெருந்தொகை வழியாக நாளை 10 மணி தல் விற்பனை கிடைக்கும்.சிறப்பு பதிப்பான ஹட்சுனி கருவியும் அதே நாளில் 2 மணி முதல் விற்பனைக்கு வரும்.

மாறுபாடு

இந்தியா உட்பட மற்ற நாடுகளில் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மாறுபாடு வெளியீட்டை காணலாம். முன்னதாக வெளியான சியோமி ரெட்மீ 4எக்ஸ் லீக்ஸ் தகவலின் கீழ் இக்கருவி 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடாக வெளிவரலாம் என்றும் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Xiaomi Redmi Note 4X price confirmed; sale debuts tomorrow. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்