சியாமி ரெட்மி நோட் 4 மாடலுக்கு இப்போது தேவை 8.0 அப்டேட்

சியாமி ரெட்மி நோட் 4 மாடலுக்கு இப்போது தேவை 8.0 அப்டேட்

சியாமி நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் மாடல்களின் வாடிக்கையாளர்கள் தற்போது MIUI 8 அப்டேட் செய்ய காத்திருக்கின்றனர். சமீபத்தில் MIUI 8.2 அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் மி, மிக்ஸ் மற்றும் மி நோட் 2 மாடல்கள் என்பது தெரிந்ததே.

சியாமி ரெட்மி நோட் 4 மாடலுக்கு இப்போது தேவை 8.0 அப்டேட்

இந்நிலையில் தற்போது ரெட்மி நோட் 4 மாடல்களின் வாடிக்கையாளர்கள் MIUI 8 அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.

ரெட்மி நோட் 4 மாடல் என்பது MIUI 8.1 ஆண்ட்ராய்டு வெர்ஷனை உடைய ஒரு ஸ்மார்ட்போன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாடலில் உள்ள V8.1.15.0.MCFMID தானாகவே ஆட்டோ பிரைட்னெஸ் மோட் கொடுக்கும் தன்மை கொண்டது.

இந்த மாடல் வைத்திருப்பவர்கள் MIUI 8.2 அப்டேட் பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை உள்ளது. ரெட்மி நோட் 4 மாடல் வைத்திருக்கும் நபர்கள் MIUI 8.1 ROMஐ இப்போதைக்கு டவுன்லோடு செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ரூ.5000/- கேஷ்பேக் ஆபருடன் அதிரடி விலைக்குறைப்பில் ஐபோன் எஸ்இ.!

ரெட்மி நோட் 4 மாடல் குறித்த விஷயங்களை மீண்டும் நினைவு கூற வேண்டும் என்றால் இந்த மாடலில் 5.5 இன்ச் FHD 1080P டிஸ்ப்ளே மற்றும் 2.5 கவர்ட் கிளாஸ் முன்பக்கமும், ஓரங்களிலும் இருக்கும். மேலும் ஸ்னாப்டிராகன் 625 SoC பவர் கொண்ட இந்த போனில் 2GB/3GB/4GB ரேம் கொண்ட போன்களாக உள்ளது. மேலும் சீன மார்க்கெட்டில் உள்ள மெடியாடெக் அம்சமும் இந்த போனில் உள்ளது.

மேலும் ரெட்மி நோட் 4 மாடலில் பிங்கர் பிரிண்ட் சென்சார் அம்சமும், 4000 mAh பேட்டரி தன்மையும் உள்ளதால் ஒருநாள் முழுக்க பயன்படுத்தலாம். மேலும் இந்த மாடலில் 13MP பின் கேமிராவுடன் PDAF அம்சங்களும், 77 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸும் உளது. மேலும் 5MP செல்பி கேமிராவுடன் 85 டிகிரி வைட் ஆங்கிள் லென்சும் இதில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
The Qualcomm variant of the Xiaomi Redmi Note 4 gets the MIUI 8.1 update. Take a look at the improvements it will bring about.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்