சியோமி ரெட்மீ நோட் 4 (2ஜிபி மாறுபாடு) வெள்ளியன்று இந்தியாவில் விற்பனை.!

மி.காம் வலைத்தளம் மூலமாக கிடைக்கும் இக்கருவியின் விலை மற்றும் அம்சங்கள்.!

|

சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் இந்தியாவில் விற்பனை நிகழ்த்துகிறது. இந்த விற்பனையின் மிகப்பெரிய சிறப்பம்சமாக மிகவும்-அடிப்படை மற்றும் மலிவான ரெட்மீ நோட் 4 மாதிரி விற்பனைக்கு கிடைகும்.

இக்கருவியின் அடிப்படை மாடல் விலை புள்ளியை கருத்தில் கொண்டால் இது இந்தியாவில் உள்ள பிற பதிப்புகளுடன் ஒப்பிடும்போது அதிகபட்ச இழுவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மி.காம் வலைத்தளம் மூலமாக கிடைக்கும் இக்கருவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தொகுப்பே இது.!

எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில்

எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில்

சியோமி ரெட்மீ நோட் 4 கருவி இந்தியாவில் மூன்று வகைகளில் கிடைக்கும் : 2ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/-க்கும், 3ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும், 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.12,999/-க்கும் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை மெருகேற்றும் 10 பொருட்கள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 2GB RAM Variant to Go on Sale for First Time on Friday. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X