2016-ல் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட கருவிகள்.!

2016ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள்.

Written By:

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் சியர்ச்சில் அதிகமாக தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்த தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் முடிந்துள்ள 2016ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி.!? (எளிய வழிமுறைகள்)

இந்த பட்டியலில் அனைவரும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ரூ.251க்கு விற்பனை செய்யப்பட்ட ஃப்ரீடம் 251 மாடல்தான் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் என்பதை சொல்ல தேவையே இல்லை. இந்த பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஃப்ரீடம் 251

ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் ரூ.251க்கு ஸ்மார்ட்போன் தயாரித்து சப்ளை செய்வதாக அறிவித்தவுடன் இவ்வளவு குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன் வெளிவர வாய்ப்பே இல்லை என்று பலர் கூறியபோதிலும், இதுகுறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமல் மில்லியன் கணக்கானோர் ரூ.251 அட்வான்ஸ் ஆக கட்டினர்.

ஆனால் இந்நிறுவனம் தான் வாக்களித்தபடி ஸ்மார்ட்போனை யாருக்கும் சப்ளை செய்யவில்லை. தற்போது இந்நிறுவனம் குறித்த எவ்வித தகவலும் இல்லாததால், பணம் கட்டியவர்களுக்கு பணமோ அல்லது ஸ்மார்ட்போனோ வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

ஆப்பிள் ஐபோன் 7:

பெரும்பாலான இந்தியர்கள் கூகுளில் தேடிய போன் ஆப்பிள் ஐபோன் தான். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தொடர்ந்து இந்தியர்கள் பேராதரவு கொடுத்து வரும் நிலையில் இந்த போனுக்கும் பெரும் வரவேற்பு கொடுத்தது வியப்பில்லைதான்.

இருப்பினும் கடந்த ஆப்பிள் மாடலுக்கு கொடுத்த வரவேற்பை காட்டிலும் ஆப்பிள் ஐபோன் 7க்கு கிடைத்த வரவேற்பு பாதிதான். அதற்கு முக்கிய காரணமாக ஆப்பிள் ஐபோனுக்கு இணையாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி 7 இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சியாமி ரெட்மி நோட் 3:

இந்தியர்களின் ஸ்மார்ட்போன் தேடலில் சியாமி ரெட்மி நோட் 3 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது,. அதுமட்டுமின்றி கடந்த வாரம் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆன ஸ்மார்ட்போன் இந்த சியாமி ரெட்மி நோட் 3 மாடல்தான். அறிமுகம் செய்யப்பட்ட ஏழே மாதங்களில் 23 லட்சம் சியாமி ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.

லெனோவா K4 நோட்:

கூகுள் சியர்ச்சில் நான்காவது இடத்தை பிடித்துள்ள லெனோவா K4 நோட் மாடல் போன் இந்தியர்களின் பட்ஜெட்டிற்கு மிகப் பொருத்தமாக இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த மாடலின் VR டெக்னாலஜி, அதிக நேரம் சார்ஜ் நிற்கும் பேட்டரி ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் திருப்தி படுத்தியது

சாம்சங் கேலக்ஸி J7:

கூகுள் சியர்ச்சில் அதிகளவு தேடப்பட்ட ஸ்மார்ட்போனில் 5வது இடத்தை பிடித்துள்ள சாம்சங் கேலக்ஸி J7 மாடல் நடுத்தர பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை பெரிதும் கவரந்தது. சரியான விலை, 4G சப்போர்ட் மற்றும் நீண்ட நாள் சார்ஜ் நிற்கும் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சம் ஆகும்

மோட்டோ 4G:

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இந்த மோட்டோ 4G மாடல் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் நிறைந்த தரம் கொண்ட போன் என்ற பெயர் வாங்கியதே. நடுத்தர விலையில் கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் நல்ல விற்பனையை பெற்ற மாடல்களில் இந்த மோட்டோ 4G மாடலும் ஒன்று.

ஒன் ப்ளஸ் 3:

இந்தியாவில் அதிகளவு தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 7வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ள ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோனின் விலையை விட பாதியே இருந்தது ஒரு முக்கிய காரணம். விலை மலிவாக இருந்தாலும் நிறைவான அம்சங்கள் இந்த போனில் இருந்ததுதான் இதனை ஏழாவது இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

ஐபோன் SE:

இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன்7 ப்ளஸ் ஆகிய மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அதன் விலை நடுத்தர வர்க்கத்தினர் நெருங்க முடியாத நிலையில் இருந்தது. எனவே நடுத்தர வர்க்கத்தினர்களும் ஐபோன்களை பயன்படுத்தலாம் என்ற நிலையில் பட்ஜெட் விலைக்கு வந்த ஐபோன் தான் ஐபோன் SE. மேலும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த ஐபோனை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தந்ததால் இந்தியாவில் இந்த போன் நல்ல விற்பனை பெற்றது.

கூகுள் பிக்சல்:

கூகுள் சியர்ச்சில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இடம் பெறாமல் இருக்குமா? கூகுள் பிக்சல் இந்தியர்களின் தேடலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் இந்த போன் இந்தியர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடிக்க வேண்டிய காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் விலை. மிகப்பெரிய விலையில் இருந்ததால் இதில் சிறப்பு அம்சங்கள் பல இருந்தாலும் இந்தியர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த போன் 10% அளவுக்கே விற்பனை ஆனது

லெனோவா K4 நோட்:

4G சப்போர்ட் மற்றும் சரியான விலையில் வெளியான லெனோவா K4 நோட், இந்தியர்களின் சியர்ச்சில் 10வது இடத்தை பிடித்தாலும் இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்று விற்பனை ஆகி கொண்டிருக்கும் போன்களில் ஒன்று.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
The most searched smartphones on Google India include Xiaomi Redmi Note 3, Samsung Galaxy J7, Apple iPhone 7, OnePlus 3, Lenovo K4 note, Moto G4 Plus and more. Take a look!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்