இந்திய வெளியீடு : ரூ.6,905/-ல் தொடங்கி ரூ.8,888/-க்குள் மொத்தம் 3 ரெட்மீ கருவிகள்.!

ரெட்மீ கருவிக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்களும் காத்திருக்கலாம்.!

|

இந்தியாவில் நாளுக்குள் நாள் மிகவும் பிரபலாமாகிக் கொண்டே போகும் சியோமி நிறுவனத்தின் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ தொடர் கருவிகளில் ஒன்றான ரெட்மீ 4, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பணிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் ஒரு இடைப்பட்ட விலை (மிட்-ரேன்ஜ் ) கொண்ட தொலைபேசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதன் விலை ரூபாய் 8,000/- எனபதை சுற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான

மலிவான

ரூ.8,000/- என்ற விலை நிரனயம் ரெட்மீ எக்ஸ் தொடர் கீழ் தொடங்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த தொலைபேசிகளில் ஒன்றாகும் என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம், இந்தியாவில் விற்பனையாகும் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டு இயங்கும் கருவிகளுடன் ஒப்பிடும் போது இது மலிவான தொலைபேசியாகும்.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

நினைவுக்கோரும் வண்ணம் சியோமி ரெட்மீ 4 கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 3 மற்றும் ரெட்மி 3எஸ் ஆகிய கருவிகளின் வாரிசு கருவியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள்

பெரும்பாலான இந்திய சியோமி பிரியர்களின் கவனத்தை ஈர்த்த இக்கருவி இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ன விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பியிருந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ சியோமி இந்தியா ட்விட்டர் இந்திய சந்தையில் ஒரு புதிய ரெட்மீ தொலைபேசி வரும் ட்வீட் செய்திருந்தது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

அதனை தொடர்ந்து அனைத்து உலோக யூனிபாடி வடிவமைப்பு, பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்ட ரெட்மீ 4 கருவியின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டது. ரெட்மி 4 ஆனது அதன் முன்னோடிகளான - ரெட்மி 3 மற்றும் ரெட்மி 3 எஸ்ஸ் போன்றே தோற்றத்தைத் தருகிறது. மேலும் டிஸ்பிளேவை பொறுத்தவரை முன்பு வெளியான ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் போன்று காட்சியளிக்கிறது.

1080பி டிஸ்ப்ளே

1080பி டிஸ்ப்ளே

சிறிய பெசல்கள் மற்றும் 5 அங்குல 1080பி டிஸ்ப்ளே நிரம்பியுள்ள இக்கருவி ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரூ.8,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இக்கருவி ஒரு கெளரவமான தொலைபேசியாகவே தோன்றுகிறது.

மைக்ரோ எஸ்டி

மைக்ரோ எஸ்டி

மேலும் இதர விவரக்குறிப்புகள் அடிப்படையில், சியோமி ரெட்மீ 4 ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வருகிறது மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

2ஜிபி ரேம்

2ஜிபி ரேம்

இந்த அம்சங்கள் மற்றும் இந்த விலை நிர்ண்யத்தை வைத்து பார்க்கும் போது சியோமி அதன் மற்றொரு மலிவான மாறுபாடு ஸ்மார்ட்போனையும் துவக்கலாம் என்றும், அது ஸ்னாப்டிராகன் 430 சிபியூ, 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

ரெட்மீ 4 கருவியின் கேமரா துறையை பொருத்தமட்டில் ஒரு 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது மேலும் முன்பக்கம் இந்த சாதனம் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த் சாதனம் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான மீயூ கொண்டு இயங்குகிறது மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரவும் கொண்டுள்ளது.

ரூ.6,905/-

ரூ.6,905/-

ஸ்னாப்ட்ராகன் 430 சிபியூ கொண்டு சீனாவில் அறிவிக்கப்பட்ட மற்றொரு மலிவான மாறுபாடு இந்தியாவில் ரூ.6,905/- என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8,888/-

ரூ.8,888/-

மறுபுறம், ஸ்னாப்ட்ராகன் 625 மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு மாறுபாடு இந்தியாவில் ரூ.8,888/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மே 16-ஆம் தேதி

மே 16-ஆம் தேதி

மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ 4 கருவியை சீன நிறுவனமான சியோமி இந்தியாவில் வரும் மே 16-ஆம் தேதி நடக்கும் நிகழ்வொன்றில் இந்திய வெளியீட்டை தொடங்க திட்டமிட்டுள்ளது. ரெட்மீ கருவிக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்களும் காத்திருக்கலாம் அதாவது ரெட்மீ 4 கருவியின் மலிவான மற்றும் 3ஜிபி ரேம் மாறுபாடும் விற்பனைக்கு அறிவிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4 India launch is on May 16, price likely to be around Rs 8,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X