நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சியாமி ரெட்மி 4 வந்துவிட்டது. இதன் சிறப்பு அம்சங்கள் இதோ...

Written By:

கிழக்கு நாடுகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியாமி நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளும் இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த நடுத்தர பட்ஜெட் விலை போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சியாமி ரெட்மி 4 வந்துவிட்டது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சியாமி ரெட்மி 4 கடந்த ஆகஸ்ட் மாதமே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருசில தொழில்நுட்ப காரணங்களால் இந்த போன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் நவம்பர் 4ல் மிக பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.

தரமான பவர் பேங்க் தேர்வு செய்யச் சில டிப்ஸ்..

இந்த சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்,.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

5 இன்ச் HD டிஸ்ப்ளே

இந்த சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஃபுல் HD 1080P டிஸ்ப்ளே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியாமி ரெட்மி 3 மாடல் ஸ்மார்ட்போனிலும் இதே அளவு டிஸ்ப்ளேதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் பிராஸசர் எப்படி?

இந்த சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மற்றும் ஆக்டோகோர் சிப் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அதெல்லாம் சரி, கேமிராவின் பவர் என்ன?

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் கேமிரா குறித்து தற்போது பார்ப்போம். இந்த மாடல் போனில் ரெட்மி 3 மாடலில் உள்ளது போலவே 13 MP பின் கேமிரா உள்ளது. மேலும் செல்பி கேமிரா என்று கூறப்படும் முன் கேமிரா 5 MP அம்சத்தில் உள்ளது. சிங்கிள் டோன் LED பின்கேமிராவில் உள்ளது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்

4100mAh பேட்டரியா?

சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் மாடலில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே 4100mAh பேட்டரி அமைந்துள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் தன்மை உடையதாக இருக்கும். மேலும் இந்த போன் 8.9mm அளவில் கிரே, சில்வர் மற்றும் கோல்ட் கலர்களில் வெளிவந்துள்ளது.

சியாமி ரெட்மி 4A எப்படி இருக்கும்

கிட்டத்தட்ட சியாமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் போலவே சியாமி ரெட்மி 4A மாடலும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5 இன்ச் டிஸ்ப்ளேவில் 720P ரெசலூசனில், ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன், 13 MP பின் கேமிரா, 5 MP முன் கேமிரா மற்றும் 3030 mAh பேட்டரி உடன் அமைந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Xiaomi Redmi 4 is the upcoming smartphone from the Chinese tech giant and the company has teased the smartphone on Weibo along with the launch details.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்