ரூ.6999க்கு இந்தியாவில் வெளியான சியாமி ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட் போன்

Written By:

சீன நிறுவனம் சியாமி இந்திய சந்தைகளில் போட்டியை கொடுத்து வரும் நிலையில் இன்று அந்நிறுவனம் ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் ரூ.6999 க்கு வெளியிட்டுள்ளது. இந்த விலையில் சந்தையில் கிடைக்கும் போன்களை விட சிறந்த வகையில் உள்ளது.

ரூ.6999க்கு சியாமி ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட் போன்

சியோமி ரெட்மி 1எஸ் முக்கிய சிறப்பம்சங்கள்

4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் டிராக்னோட்ரெயில் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 1.6 குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜி.பி ராமுடன் ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓஎஸ் உள்ளது.

கேமராவை பொருத்தவரையில் 8 எம்பி மற்றும் 1.6 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்மார்ட் போனான இதில் 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி வசதியுடன் 2000 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது.

இதே விலையில் சந்தையில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் யுனைட், சோலோ கியு 600எஸ். செல்கான் மில்லினியம் வோக் கியு455 மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi Redmi 1S Launched in India For Rs 6,999, Redmi 1S Specs
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்