விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி 6 மாடலின் விலை, சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற....

சியாமியின் புதிய மாடலான மி 6 மாடலின் விலை தெரிய வேண்டுமா?

By Siva
|

நூற்றுக்கணக்கான மில்லியன் ஸ்மார்ட்போன் ரசிகர்களை கொண்டுள்ள சியாமி நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகள் புதியதாக வெளிவரும்போது வாடிக்கையாளர்கள் அதற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி 6 மாடலின் விலை, சிறப்பு அம்சங்கள் மற்ற

சீன நிறுவனமான சியாமியின் அடுத்த புதுவரவாக மி 6 மாடல் மிக விரைவில் வெளிவரவுள்ளது. இவ்வருடம் மே மாதம் இந்த புதிய மி 6 மாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போன் குறித்த தகவல்கள் இணையதளத்தில் அவ்வப்போது கசிந்து இது எந்த வகை மாடலாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களால் ஊகிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக விரைவில் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில் வெளியான தகவல்களில் இருந்து சியாமி மி 6 மாடல் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்

டூயல் லென்ஸ் உடன் கூடிய பின்கேமிரா:

டூயல் லென்ஸ் உடன் கூடிய பின்கேமிரா:

சமீபத்தில் வெளியான சியாமி மி நோட் 2 மாடலை போன்ற டிசைன் ஆன பிளாட் டிசைன் தான் இந்த சியாமி மி 6 மாடலிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலின் பின்பக்கத்தில் இடது புறம் டூயல் லென்ஸ் கேமிரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமிராவில் எல்.இ.டி பிளாஷ் தன்மை உள்ளது. மேலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின்பக்கத்தில் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. இந்த மாடலில் சோனி IMX400 சென்சார் இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஸ்னாட்ப்ராகன் 821 பிராஸசர் உள்ளதா?

ஸ்னாட்ப்ராகன் 821 பிராஸசர் உள்ளதா?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு இதயம் போன்றது பிராஸசர். இந்நிலையில் இந்த புதிய சியாமி மி 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 835 SoC இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே சிப்செட் தான் கேலக்ஸி எஸ்8 மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வகையான மாடல்களில் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மாடலில் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் இருக்கும் என்றும் இந்த மாடல் வரும் ஏப்ரலில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மற்ற மாடல் உள்ள போன்கள் இவ்வருட இறுதியில் வெளியாகும்

செராமிக் பாடியுடன் கூடிய ஸ்மார்ட்போன்

செராமிக் பாடியுடன் கூடிய ஸ்மார்ட்போன்

ஏற்கனவே வெளிவந்த மி மிக்ஸ் மாடலின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அது செராமிக் மெட்டல் பாடியினால் உருவானது. அதைபோலவே இந்த மி 6 மாடலிலும் செராமிக் மெடல் பாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மி 6 டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

மி 6 டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

சமீபத்தில் வெளிவந்த மி நோட் 2 மாடலில் இருந்து ஒருசில அம்சங்கள் மட்டுமே மி 6 மாடலில் வேறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இரு மாடல்களில் இருக்கும் ஒரு அம்சமாக கருதப்படுவது பிளாட் டிஸ்ப்ளே. மேலும் டூயல் லென்ஸ் கேமிராவும் இரு மாடல்களில் ஒன்றாக அமைந்துள்ள அம்சம் ஆகும்

அதெல்லாம் சரி, என்ன விலைன்னு தெரியுமா?

அதெல்லாம் சரி, என்ன விலைன்னு தெரியுமா?

மி 6 மாடலின் புதிய அம்சங்கள், டிசைன் ஆகியவற்றோடு அனைவரும் எதிர்பார்ப்பது இந்த போனின் விலை என்னவாக இருக்கும் என்பதுதான்.

சியாமியின் மற்ற மாடல்கள் போலவே இந்த போனும் அனைவரும் எதிர்பார்க்கும் சரியான விலையில்தான் வெளிவரும். 64GB, 128GB, மற்றும் 256GB என்ற மூன்று வகையில் வெளிவர இருக்கும் இந்த போன் ரூ.19000, ரூ.22000 மறும் ரூ.27500 என்ற விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiami Mi 6 is rumored to be unveiled in May and here we have the recent rumors including the presence of a ceramic body, dual rear camera lenses, and many others. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X