சியோமி மி 5சி - பென்ஞ்மார்க் பட்டியலில் சிக்கியது.!

டிஸ்ப்ளே, சேமிப்பு, ஆண்ட்ராய்டு, கேமரா, பேட்டரி, விலை.!

Written By:

ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பின் சியோமி நிறுவனம் இறுதியாக பிப்ரவரி 28-ஆம் தேதி அதன் சொந்த தயாரிப்பான பைன்கோன் செயலியை அறிமுகப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுஒருபக்கம் இருக்க கணிப்புகளின்படி வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியில் இந்த புதிய சிப்செட் இடம்பெறும் முதலாவது சாதனமாக இருக்கும் என்பது போல தெரிகிறது.

ஜிஎப்எக்ஸ்பெஞ்ச்-ல் (GFXBench) காணப்பட்டுள்ள தகவலின்கீழ் சியோமி மி 5சி கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே

தரப்படுத்தல் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சியோமி மி 5சி சார்ந்த இந்த புதிய தகவலின் கீழ் மி 5சி அக்கருவி 5 பிங்கர் கெஸ்டர் ஆதரவு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு டிஸ்ப்ளே இடம்பெறும்.

சேமிப்பு

மேலும் மி 5சி சாதனமானது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 அக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்பு திறன் அடிப்படையில், வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியானது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வர போகிறது.

ஆண்ட்ராய்டு, கேமரா

தவிர, இக்கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 7.1.1 இயங்குதளம் கொண்டு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் மி 5சி ஒரு 7எம்பி செல்பீ கேமரா உடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமரா கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி பேஸ் ரிக்கனைஷேஷன், ஃபிளாஷ் மற்றும் டச் போகஸ் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

பேட்டரி, விலை

மேலும், சியோமி மி 5சி ஒரு ஒழுக்கமான 3,200எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு சுமார் ரூ.14,623/- என்ற விலை நிர்ணயத்தில் சந்தையை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Xiaomi Mi 5C spotted on GFXBench; key specs revealed. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்