விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி 5C ஸ்மார்ட்போனின் லீக் தகவல்கள்

By Siva
|

சீன நிறுவனமான சியாமியின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் சியாமி மி நோட் 2 மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி 5C ஸ்மார்ட்போனின் லீக் தகவல்கள்

அதே சமயத்தில் இந்நிறுவனம் மேலும் ஒருசில மாடல்களை இந்த வருடத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தீபாவளிச் சலுகை : லீஇகோ அசத்தல் அறிவிப்பு!

விரைவில் இந்தியாவில் சியாமி மி 5s மற்றும் சியாமி மி 5s பிளஸ் ஆகிய மாடல்கள் வெளியாக உள்ள நிலையில் தற்பொது சியாமி மி 5C தயாரிப்பில் உள்ளதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சீன இணையதளங்களில் சியாமி மி 5C மாடல் குறித்த ஒருசில புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ வேகம் குறைந்திருப்பது உண்மையா??

எனவே சியாமி ரசிகர்களுக்காக இந்த புதிய மாடலான சியாமி மி 5C குறித்த விபரங்களை சேகரித்துள்ளோம். அவற்றை தற்போது பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி 5C மாடலின் புகைப்பட லீக்

சியாமி மி 5C மாடலின் புகைப்பட லீக்

சீனாவின் பிரபல இணையதளம் ஒன்று சியாமி மி 5C மாடலின் நான்கு புகைப்படங்களை லீக் செய்துள்ளது. இந்த மாடலின் புகைப்படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது என்னவெனில், இந்த மாடலின் ஹோம் ஸ்க்ரீன் இதுவரை இல்லாத அளவில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான்

பிராஸசர்-ஸ்டோரேஜ் எப்படி இருக்கும்?

பிராஸசர்-ஸ்டோரேஜ் எப்படி இருக்கும்?

சியாமி மி 5C மாடலின் லீக் ஆன புகைப்படங்களில் இருந்து மேலும் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அது இந்த மாடலின் பிராஸசர். இந்த மாடலில் 2.2 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர் அமைந்துள்ளதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 6.0 Marshmallow based on MIUI 8.6.9 வகையில் அமைந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் இண்டர்னல் ஸ்டோரேஜ் 64 GB என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே இப்படித்தான் இருக்குமாம் பாஸ்

டிஸ்ப்ளே இப்படித்தான் இருக்குமாம் பாஸ்

சியாமி மி 5C மாடல் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும், அதன் மேல் 2.5D கிளாஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் கண்டிப்பாக 4ஜி கனெக்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

E-Ink டிஸ்ப்ளே கேள்விப்பட்டிருக்கிங்களா?

E-Ink டிஸ்ப்ளே கேள்விப்பட்டிருக்கிங்களா?

சியாமி மி 5C மாடல் ஸ்மார்ட்போனில் E-Ink டிஸ்ப்ளே அமைந்திருக்கும் என லீக் ஆன புகைப்படங்களில் இருந்தும், சீன இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள டீசரில் இருந்தும் தெரிய வந்துள்ளது. E-Ink டிஸ்ப்ளே என்பது பேப்பர் போன்று மெல்லிய டெக்னாலஜியை சேர்ந்தது. இந்த டிஸ்ப்ளேவில் பிரைட்னெஸ் மற்றும் அல்ட்ரா பவர் வசதிகள் இருப்பதால் புதுவித அனுபவங்கள் ஏற்படும். E-Ink டெக்னாலஜி குறித்த அனுபவத்தை முன்பே பெறவேண்டும் என்றால் அமேசான் கிண்டில்-ஐ நீங்கள் பயன்படுத்தினால் புரிந்து கொள்வீர்கள்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

இதுவரை இல்லாத சியாமி வகை போன்களில் இந்த சியாமி மி 5C மாடல் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தரமான கேமிரா, E-Ink டிஸ்ப்ளே, மற்றும் உயர்வகை பிராஸசர்கள் ஆகியவையே இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 5c seems to be the new phone in the making. The device has leaked via photos showing its possible specs. It might come with an E-Ink display.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X