ரெட்மீ ப்ரோ 2 - சியோமி 2017 வியாபார வேட்டையின் அடுத்த கருவி.!

சியோமி மற்றொரு இன்ப அதிர்ச்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது போல தெரிகிறது.

|

பட்ஜெட்டில் அடங்க வேண்டும் ,அதே சமயம் அருமையான அம்சங்கள் கொண்டிருக்க வேண்டும், முக்கியமாக பார்க்க செம்ம அழகா இருக்க வேண்டும், கூடவே டிசைனும் ரொம்ப முக்கியம் - இப்படியாக உங்களின் அனைத்து வகையான ஸ்மார்ட்போன் சார்ந்த விருப்பங்களுக்கு "கிடைக்கும், உண்டு, இருக்கிறது" என்று பதில்கள் கூறும் கருவிகள் கொண்ட நிறுவனம் தான் - சியோமி.!

இந்நிறுவனத்தின் சியோமி ரெட்மீ 4 எக்ஸ் கருவியானது விலை உறுதி செய்யப்பட்டு இன்று விற்பனைக்கு வருகிறது என்பது தான் இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் பரபரப்பான செய்தியாகி இருக்குமென்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் சியோமி மற்றொரு இன்ப அதிர்ச்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது போல தெரிகிறது.

புதிய கருவி

புதிய கருவி

ஒருவாரத்திற்கு முன்பு சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ 4 எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஆன ஹட்சுனி மிக்கு கருவியை வெளியிட்டது. வெளியான கருவியின் விலையானது சுமார் ரூ.12,633/- என்று நிர்ணயிக்கப்பட்டது. மற்றும் இன்று ரெட்மீ நோட் எக்ஸ் கருவியின் அதிகாரப்பூர்வ வெளியீடு நீங்களும் தருணத்தில் சியோமி புதிய கருவி சார்ந்த வேலைகளில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது.

சியோமி ரெட்மீ ப்ரோ 2

சியோமி ரெட்மீ ப்ரோ 2

அதாவது சமீபத்திய அறிக்கைகளின்படி சியோமி நிறுவனம் ஒரு ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்ட ஒரு புதிய தொலைபேசி சார்ந்த வேலைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது. உடன் அக்கருவி சியோமி ரெட்மீ ப்ரோ 2 கருவியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருவியின் அம்சங்கள்

கருவியின் அம்சங்கள்

எனினும் இப்போதுவரையிலாக சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ஆன சியோமி இந்த தொலைபேசி சார்ந்த எந்த விவரங்களையும் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆனால் வெளியான தகவல்கள் கருவியின் அம்சங்கள் சார்ந்த குறிப்புகளையும் வழங்குவதால் இக்கருவி சாத்தியமாக அதிக வாய்ப்புண்டு என்பது போல் தான் தோன்றுகிறது.

புதிய சியோமி தொடர்

புதிய சியோமி தொடர்

மேலும் அறிக்கையின்படி வரவிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் ஆனது ஒருவேளை ரெட்மீ வரிசையில் இணைக்கப்படலாம் அல்லது மிக்ஸ் மேக்ஸ் போன்ற ஒரு புதிய சியோமி தொடர் கருவியாக அறிமுகப்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறது.

சிப்செட்

சிப்செட்

வெளியான அறிக்கைகளின்படி இக்கருவி நிறுவனத்தின் சொந்த க்ர்யோ கோர்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, உடன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட 4 x கார்டெக்ஸ் ஏ53 சிபியூ மற்றும் 1.9 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட 4 X கார்டெக்ஸ் ஏ73 சிபியூ என்ற கலவையிலான சிப்செட் இக்கருவியை பயன்படுத்தப்பட வேண்டும் என்று காட்டுகிறது.

சேமிப்பு ஆதரவு

சேமிப்பு ஆதரவு

மேலும், ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி ஆனது யூஎப்எஸ் 2.1 சேமிப்பு ஆதரவு மற்றும் இரண்டு எல்பிடிடிஆர்4 ரேம் கொண்டிருக்கும் என்றும் வெளியான லீக்ஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியீடு

வெளியீடு

இந்த கருவி எப்போது அதிகாரப்பூர்வமாக சந்தையில் கிடைக்கும் என்று பார்த்தல், இந்த சிப் வகை பெரும்பாலும் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் தான் உற்பத்தியை தொடங்கும். எனவே ரெட்மீ ப்ரோ 2 கருவியானது இரண்டாவது காலாண்டில் அறிவிக்கப்படலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.3000/-ல் பட்ஜெட்டில் 4ஜி வோல்ட் ஆதரவு கருவிகள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi may announce Redmi phone with Snapdragon 660 in Q2 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X