'ஓல்ட் இஸ் கோல்ட்' என்பதை நிரூபிக்கும் நோக்கியா 1100 மாடல்

Written by: Super Admin

இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமான புதிதில் நோக்கியாவின் மாடல்கள்தான் பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. குறிப்பாக நோக்கியா 1100 மாடல் கிட்டத்தட்ட இந்திய மக்கள் அனைவரையும் கவர்ந்தன.

'ஓல்ட் இஸ் கோல்ட்' என்பதை நிரூபிக்கும் நோக்கியா 1100 மாடல்

சிறிய கைக்கு அடக்கமான மாடல், சவுண்ட் சிஸ்டம், குறைந்த விலை ஆகிய கோடிக்கணக்கான இந்திய இதயங்களை கவர்ந்து இழுத்தது.

ரிலையன்ஸ் ஜியோஃபை : பாக்கெட் இண்டர்நெட் வசதியை பெறுவது எப்படி..?

ஆனால் 'பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப ஸ்மார்ட்போன்களின் வரவு நோக்கியோவின் மாடல்களை ஓரங்கட்டிவிட்டது. தற்போது அரிதிலும் அரிதாகவே ஒருசிலர் மட்டும் இந்த மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

பென் டிரைவரில் சேமித்த டேட்டாக்கள் அழிந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை விட இந்த பேசிக் மாடல் போன்கள் ஒருசில நேரத்தில் சிறந்தது என்று நம் மனது நினைக்கும். அவை என்னென்ன என்று பார்ப்போமா!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்த போனை வாங்க உங்களின் ஒருநாள் பாக்கெட் மணி போதும்

ஒரு விலையுயர்ந்த ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டுமானால் உங்களின் ஒரு மாத சம்பளம் காலியாகிவிடும். ஆனால் இதுபோன்ற பேசிக் மாடல் வாங்க உங்களுடை ஒருநாள் பாக்கெட் மணியே போதுமானது. ரூ.800 மற்றும் அதற்கும் குறைவாகவே இந்த போன் ஷோரூம்களில் கிடைக்கும்.

தொலைஞ்சு போச்சா! கவலையே வேண்டாம்

மிகக்குறைந்த விலை என்பதால் இந்த வகை போன்கள் தொலைந்து போனால் எவ்வித மனவருத்தமும் இருக்காது. ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்து ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்கி அது தொலைந்துவிட்டால் உங்களின் பல நாள் தூக்கம் போய்விடும்.

இதைவிட ஸ்ட்ராங்கான போன் வேறு இல்லை

தற்போது வரும் ஆண்ட்ராய்டு போன்கள் கைதவறி கீழே விழுந்துவிட்டால் டிஸ்ப்ளே பல்லை இளித்துவிடும். ஆனால் நீங்கள் நோக்கியா 1100 போனை உங்கள் குழந்தைகளிடம் தூக்கி போட்டுகூட விளையாடலாம். எந்தவித பாதிப்பும் இருக்காதூ.

பளீச்சின்னு டார்ச்லைட் இருக்கும் தெரியுமா?

இதில் உள்ள டார்ச் லைட், உங்கள் வீட்டில் கரண்ட் இல்லாதபோது கிட்டத்தட்ட ஒரு டியூப் லைட்டுக்கு சமமான வெளிச்சத்தை கொடுக்கும்,. தற்போது வரும் ஸ்மார்ட்போனிலும் ஃபிளாஷ் லைட் உள்ளது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதிலுள்ள லைட்டை பயன்படுத்தினால் மிக வேகமாக சார்ஜ் இறங்கிவிடும். நோக்கியோ மாடலில் இதுபோன்ற அவஸ்தை இல்லை

பேட்டரி லைஃபை பற்றி கவலை வேண்டாம்

ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் எங்கு சென்றாலும் சார்ஜரையும் சேர்த்து எடுத்து கொண்டு போகவேண்டும். எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் காலியாகிவிடும் ஆபத்து அதில் உண்டு. ஆனால் நோக்கியா 1100 மாடலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு கூட சார்ஜ் நிற்கும் தன்மையுடையது என்பதால் அதை கையில் வைத்துக்கொண்டு ஒரு மினி டூர் சென்று வரலாம்.

டைப் அடிப்பது ரொம்ப சுலபம் பாஸ்

டச் போன் மாடல்களை விட இவ்வகை மாடல்களில் டெக்ஸ்ட் டைப் அடிப்பது ரொம்ப சுலபம்.

ஸ்பீட் டயல் ஆப்சன் இதுல இருக்குது தெரியுமா?

நோக்கியா 1100 மாடலில் மொத்தம் ஒன்பது எண்களை ஸ்பீட் டயலில் சேவ் செய்து கொண்டு உடனே அவர்களை அந்த குறிப்பிட்ட எண்களை மட்டும் அழுத்தி போன் செய்யலாம். இவர்களை அழைக்க நீங்கள் காண்டாக்ட் ஆப்சனுக்கு செல்ல வேண்டாம்.

இந்த பிராப்ளம் வரவே வராது

நோக்கியோ 1100 மாடல் என்றைக்காவது ஹேங் ஆகி நீங்கள் பார்த்ததுண்டா. அப்படியே சிலசமயம் ஏதாவது பிரச்சனை என்றால் பேட்டரியை கழட்டி ஒருசில நிமிடம் கழித்து மீண்டும் பேட்டரியை போட்டால் சூப்பராக இயங்கும்.

பாஸ்வேர்டை மறந்துவிட்டோமே என்ற கவலை வேண்டாம்

ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்துவிட்டு ஒருசிலர் படாதபாடு படுவதை பார்த்து வருகிறோம். ஆனால் இவ்வகை மாடல்களில் அந்த பிரச்சனையே இல்லை. லாக் செய்வதும், அன்லாக் செய்வதும் மிக சுலபம்

எந்த சார்ஜரும் சேரும்

நோக்கியோ மாடலின் எந்த சார்ஜரும் எல்லா மாடல்களுக்கும் சேரும். எனவே எங்கு சென்றாலும் யாரிடமாவது கடன் வாங்கி சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். ஆனால் தற்போது உள்ள ஒவ்வொரு மாடலுக்கும் ஒவ்வொரு வகையில் சார்ஜர் இருப்பதால் அந்த குறிப்பிட்ட சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Nokia 1100 is a great phone that costs just Rs 800. The smartphones that are available these days are too expensive. You can take a look at why the Nokia phone is better from the reasons that we have detailed over here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்