கூகுளில் அதிகம் தேடபட்ட ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு கருவிகள் வெளியாகின. ஆப்பிள், சாம்சங், மைக்ரோமேக்ஸ், என அனைத்து முன்னணி நிறுவனங்களும் எண்ணற்ற கருவிகளை வெளியிட்டது. இவைகளில் பெரும்பாலான கருவிகள் பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியர்கள் அதிக தேடிய ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியர்கள் தேடிய அந்த 10 ஸ்மார்ட்போன் கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

10.

2015 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் லெனோவோ ஏ6000 10வது இடம் பிடித்திருக்கின்றது. சந்தையில் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படும் இந்த கருவி தான் விலை குறைந்த 4ஜி ஸ்மாபர்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

09.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த கருவி ரூ.5000க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

08.

ரூ.20,000 பட்ஜெட்டில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் என்றால் இந்த கருவியை கூறலாம். மோட்டோரோலாவின் இந்த கருவி கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளில் 08 ஆம் இடத்தில் இருக்கின்றது.

07.

பட்ஜெட் விலையில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ7 சிறப்பான டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி கொண்டிருக்கின்றது.

06.

4.7 இன்ச் திரை மற்றும் மெலிதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கருவியின் இன்றைய விலை ரூ.13,000.

05.

கூகுள் தேடலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி. குறைந்த விலையில் வாட்டர் ப்ரூஃப் கொண்ட கருவி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

04.

பட்ஜெட் விலையில் வெளியானதில் இந்த கருவி மிகவும் பிரபலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரிய ஸ்கிரீன டிஸ்ப்ளே, சிறந்த கேமரா கொண்ட இந்த கருவியின் விலை ரூ.8,499.

03.

கூகுளிள் அதிகம் தேடப்பட்ட கருவிகளில் மூன்றாம் இடம் பிடித்திருக்கின்றது லெனோவோவின் கே3 நோட் கருவி. ரூ.9,999 விலையில் இந்த கருவி அதிகம் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது.

02.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் கருவி வெளியாகி மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தாலும் கூகுள் தேடலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது எனலாம்.

01.

ஐபோனை பின்னுக்கு தள்ளி சாம்சங் நிறுனத்திற்கும் இடம் அளிக்காமல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்திருக்கின்றது யு யுரேகா. இதோடு இந்த ஆண்டு அதிகம் விற்பனையான கருவிகளில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Read Here in Tamil Which smartphone did India search for the most in 2015.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்