இதுவரை இல்லா சலுகைகள், சத்தமில்லாமல் சாதிக்க நினைக்கும் புதிய நிறுவனம்.!!

Written By:

லீ சூப்பர்போன் மற்றும் சூப்பர் டிவி கருவிகளைக் கொண்டு லீஇகோ நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்நிறுவனம் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனை திருவிழா ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் சந்தையில் அதிகப்படியான சலுகை மற்றும் அதிக தள்ளுபடியுடன் கருவிகளின் விற்பனை செப்டம்பர் மாதத்திலேயே நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.

சீனா, ஹாங் காங் மற்றும் அமெரிக்க சந்தைகளில் லீஇகோ நிறுவனம் விற்பனை திருவிழாக்களை செப்டம்பர் மாதம் நடத்த இருக்கின்றது. இந்நிலையில் லீஇகோ விற்பனை திருவிழா இந்தியாவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விரிவாக்கம்:

இந்திய சந்தையில் விரிவாக்கம் செய்யும் பணிகளில் லீஇகோ அதிக கவனம் செலுத்துவது இந்திய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து விட்டது. அதிக தரமுள்ள கருவிகளும் அவற்றை அதிக சலுகைகளுக்கு வழங்குவதாலும் லீஇகோ நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளது.

ஆன்லைன் சந்தை:

இந்த விற்பனை திருவிழாவின் மூலம் இந்திய ஆன்லைன் சந்தையில் தனக்கான இடத்தை நிரந்தரமாகப் பிடிக்கும் நோக்கில் லீஇகோ முயற்சிப்பதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விற்பனை:

ஆன்லைனில் தனக்கென பிரத்தியேக விற்பனை மையத்தினை துவங்கியுள்ள லீஇகோ தனது கருவிகளை அங்கு விற்பனை செய்து வருகின்றது. லீமால்.காம் தளத்தில் பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பயனர் எண்ணிக்கை:

துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் லீமால் இந்தியா தளத்தின் பயனர் எண்ணிக்கை 75 லட்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக லீஇகோ விற்பனை திருவிழாவின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சலுகை:

இதுவரை இல்லாத சலுகைகளுடன் சூப்பர்போன், சூப்பர் டிவி மற்றும் இதர கருவிகளை வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதிகளவு சலுகைகளுடன் சேர்த்து பல்வேறு இலவசங்களும் இந்த விற்பனை திருவிழாவில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
LeEco is rumoured to be hosting an EPIC shopping fest for its Indian users
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்