அசத்தும் செல்பீ கேம், மிரட்டும் முன்பக்க ரியர் கேம்.!

முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு கேமாரவிலும் சரி சமமான திறன்களை கொண்ட ஒரு தகுதியான கருவியை பற்றிய விரிவான அம்சங்களை பற்றித்தான் நாம் இன்று காணவுள்ளோம்.!

|

நாம் அனைவருமே செல்பீகள் எடுக்க பேரார்வம் கொண்டவர்கள் என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக சமூக வலைப்பின்னல் தளங்களில் மிகவும் பைத்தியகாரத்தனமான மற்றும் சுவாரஸ்யமான தருணங்களை ஒரு செல்பீயின் வழியே உலகளாவிய வண்ணம் பதிவிடும் நமக்கு அதிக அளவிலான மெகா பிக்சல்கள் கொண்ட செல்பீ கேமரா மீது தனி ஆர்வம் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதனால் பின்பக்க கேமராக்கள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்று அர்த்தமில்லை. செல்பீக்களுக்கு இணையாக ரியர் கேமராக்கள் மீதும் பயனர்களின் கவனம் அதிகமாகவேத்தான் உள்ளது. அப்படியாக, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு கேமாரவிலும் சரி சமமான திறன்களை கொண்ட ஒரு தகுதியான கருவியை பற்றிய விரிவான அம்சங்களை பற்றித்தான் நாம் இன்று காணவுள்ளோம்.!

இரட்டை செல்பீ கேம்

இரட்டை செல்பீ கேம்

ஒப்போ அதன் செல்பீ எக்ஸ்பெர்ட் கருவியான எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு நிலையான லென்ஸ் என இரட்டை செல்பீ கேம் கொண்ட இக்கருவி நிச்சயமாக உங்களை ஒரு செல்பீ நிபுணர் ஆக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பீல்ட்-ஆப் -வியூ

பீல்ட்-ஆப் -வியூ

டூவல் செல்பீ கேமராவின் நிலையான லென்ஸ் ஆனது ஒரு வழக்கமான ஒப்போ முன்பக்க கேமரா போலவே தெளிவான ஆழம் மற்றும் சப்தம் குறைப்பு ஆகிய விடயத்தில் கவனம் செலுத்த அதன் இரண்டாவது வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது பெரிய பீல்ட்-ஆப் -வியூ விடயத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த தனிப்பட்ட செல்பீகளுக்கான டூவல் குழு ஒரு விசேடமாக வடிவமைக்கப்பட்ட செல்பீ கேமரா என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பியூடிப்பை 4.0 ஆப்

பியூடிப்பை 4.0 ஆப்

வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் பியூடிப்பை 4.0 ஆப் பொருத்தப்பட்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செல்பீகளை கையாளும் போது, தொனி அனுசரிப்பு, நிழல்கள் மற்றும் தெளிவான ஒளி முக வரையறைகள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.

தெளிவான கண்கள்

தெளிவான கண்கள்

செல்பீக்களில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு மென்பொருள் அம்சமான பியூட்டிப்பை ஆனது பிரகாசமான, தெளிவான தோல், தெளிவான கண்கள் போர்னா செல்பீக்களுக்கான அடிப்படை விடயங்களை உயர்த்தும்.

செல்பீ பனோரமா

செல்பீ பனோரமா

இந்த அம்சம் மூலம் உங்கள் குரூப் செல்பீயில் யாரையும் தவர விட முடியாது. முதலில் இதன் முன்பக்க வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது அனைவரையும் ப்ரேமில் கொண்டுவர உதவும் இரண்டாவதாக ஒரு பரந்த அளவிலான மூன்று புகைப்படங்களை இணைக்கின்ற உள்ளமைக்கப்பட்ட 'செல்பீ பனோரமா' அம்சம் உங்களின் க்ரூப் செல்பீயை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

ஸ்க்ரீன் பிளாஷ்

ஸ்க்ரீன் பிளாஷ்

வரவிருக்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கேமராவில் மேம்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் ப்ளாஷ் அம்சம் உள்ளது. இதன்மூலம் செல்பீக்களின் ஒளி நிலைமைகள் பிரகாசமாக இருக்கும். உடன் ஒப்போ சில செம்மைப்படுத்த ஸ்கிரீன் பிளாஷ் ஆனது தானாகவே பிரைட்னஸ் லெவல் மற்றும் சுற்றுசூழல் ஆகியவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

பால்ம் ஷட்டர்

பால்ம் ஷட்டர்

செல்பீக்களின் பொது ஷட்டர் பொத்தானை சரியாக 'ஷேக்' இல்லாமால் அழுத்துவது என்பது ஒரு கடினமான வேலையாகும். அதற்காகவே நீங்கள் ஒரு ஷாட்டை மங்கலான காரணத்தால் பல முறை எடுக்க நேரிடும். அதற்கான ஒரு எளிமையான தீர்வுதான் பால்ம் ஷட்டர். இந்த அம்சம் மூலம் நீங்கள் கேமரா முன் உங்கள் கையை அசைப்பது மூலம் ஆட்டோமேட்டிக் செல்பீ கவுண்டவுனை தொடங்க முடியும்.

ரியர் கேமரா

ரியர் கேமரா

செல்பீயில் பல்வேறு பில்டர்கள் மற்றும் வாட்டர்மார்க்குகள், முடிவற்ற படைப்பாற்றல் மற்றும் வேடிக்கைகளை அனுமதிக்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது அதன் ரியர் கேமராவிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 16எம்பி பின்புற கேமரா இந்த உலகின் சிறந்த படங்களை கைப்பற்ற உறுதி செய்கிறது.

குறைந்த ஒளி நிலைமை

குறைந்த ஒளி நிலைமை

இதன் பின்புற கேமராவின் பெரிய துளையானது 100 சதவிகிதம் அதிக ஒளி வேகத்தை அடைய அனுமதிக்கிறது. இதனால் புகைப்படத்தில் குறைபாடுகள், மங்கலான நிலை, குறைந்த ஒளி நிலைமை போன்ற சிக்கல்களே இருக்காது.

எக்ஸ்பெர்ட் மோட்

எக்ஸ்பெர்ட் மோட்

இதன் கேமரா 'எக்ஸ்பெர்ட் மோட்' என்ற கட்டமைக்கப்பட்ட அம்சம் மூலம் ஷட்டர் வேகம், போகஸ், வைட் பேலன்ஸ் மற்றும் ஐஎஸ்ஓ என ஒவ்வொரு கேமரா அமைப்பிலும் தேவையான மாற்றங்களை நிகழ்த்த உதவும். சுருக்கமாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து தொழில்முறை கேமரா போன்ற படங்களை அடைய இது உதவும்.

அல்டரா எச்டி, டபுள் எக்ஸ்போஷர்

அல்டரா எச்டி, டபுள் எக்ஸ்போஷர்

உடன் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியின் அல்ட்ரா-எச்டி அம்சம் ஆன் செய்யப்பட்டு இருக்கும்போது கேமரா தொடர்ந்து நான்கு புகைப்படங்களை எடுத்து அவைகளை ஒன்றாகி ஒரு 50 எம்பி அளவிலான தரத்தில் ஒரு அல்டரா எச்டி புகைப்படமாக வழங்கும்.

கேமரா ஆப்

கேமரா ஆப்

இதன் இரட்டை வெளிப்பாடானது இரண்டு புகைப்படங்களை அவைகளை ஓவர்லேப் செய்து ஒரு கனவு புகைப்படத்தை உங்களுக்கு வழங்கும். உடன் இதன் மற்றொரு கேமரா ஆப் ஆன சூப்பர் கிப் ஆனது உடனடியாக பார்வேர்ட் மற்றும் பேக்வேரட் செய்யக்கூடிய கிப் (GIF) களை உருவாக்க உதவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
We put the OPPO F3 Plus Camera performance to real-life tests and the results are amazing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X