உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரால் டேமேஜ் ஆகிவிட்டதை கண்டுபிடிக்க 6 வழிகள்

Written by: Super Admin

ஆயிரக்கணக்கில் நாம் செலவழித்து வாங்கிய போனை நமது பிள்ளைகள் போல பாதுகாத்து வைத்திருப்போம். ஆனால் ஒரே ஒரு துளி தண்ணீர் அந்த போனிற்குள் சென்றது என்றால் அவ்வளவுதான்.

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரால் டேமேஜ் ஆகிவிட்டதை கண்டுபிடிக்க 6 வழிகள்

கிட்டத்தட்ட பேரிச்சம்பழத்திற்கு எடை போடும் நிலைக்கு போய்விடும். எனவே மொபைல்போனை தண்ணீரில் இருந்து பாதுகாப்பது ரொம்ப முக்கியம்

e-KYC சேவையை ஆரம்பிக்கும் ஏர்டெல்-வோடோபோன் நிறுவனங்கள்

பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் வாட்டர்புரூப் இல்லாமலே வெளியிடுகின்றன. அதுமட்டுமின்றி தண்ணீரால் கோளாறு ஏற்பட்டால் அதற்கு வாரண்டியும் கிடையாது. எனவே தண்ணீரில் இருந்து மொபைல் போன்களை பாதுகாக்கும் வழிகள் குறித்து தற்போது பார்ப்போமா!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பேட்டரியில் உள்ள வாட்டர் ஸ்ட்ரிப்பை பாருங்கள்:

ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் லித்தியம் அயன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேட்டரியுடன் வாட்டர் ஸ்ட்ரிப் இருக்கும். வெள்ளையாக இருக்கும் இந்த வாட்டர் ஸ்ட்ரிப் பிங்க் அல்லது சிகப்பு நிறத்தில் மாறிவிட்டால் இதன் பின்னர் இந்த பேட்டரி அவ்வளவுதான் என்று அர்த்தம்.

இன்னொரு பேட்டரியுடன் ஒப்பிடுங்கள்:

தண்ணீர் உள்ளே புகுந்து பேட்டரி பழுதடைந்தது என்பதை கலரில் வைத்து கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதே டைப்பில் உள்ள வேறொரு பேட்டரியுடன் ஒப்பிட்டு பாருங்கள். பின்னர் பேட்டரியை ஸ்மார்ட்போனில் போட்டு ஆன் செய்யுங்கள். ஆன் ஆகவில்லை என்றால் தூக்கி போட்டுவிட்டு வேறு புதிய பேட்டரியை வாங்கிவிடுங்கள்

ஐபோனில் தண்ணீர் போனால் என்ன செய்ய வேண்டும்

ஐபோன் 6, ஐபோன் 6எஸ், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 5, ஐபோன் 5சி போன்ற ஐபோன் வகைகளில் தண்ணீர் போய்விட்டதாக நீங்கள் சந்தேகம் அடைந்தால் உடனே சிம்கார்டை வெளியே எடுத்துவிடுங்கள். பின்னர் சிம் இருக்கும் பகுதியில் சிகப்பு இண்டிகேட்டர் இருந்தால் உங்கள் ஐபோன் தன்ணீரால் டேமேஜ் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஐபோன் மாடல்களில் தண்ணீர் புகுந்தால்?

சிலவருடங்களுக்கு முன் வெளியான ஐபோன் மாடல்களான ஐபோன் 4, ஐபோன் 4எஸ், ஐபோன் 3ஜி, மற்றும் ஐபோன் ஜிஎஸ் ஆகிய மாடல்களில் தண்ணீர் புகுந்திருந்தால் அதில் உள்ள ஹெட்பொன் கனெக்டரான எல்.சி.ஐ இண்டிக்கெட்டரை செக் செய்யுங்கள்

சாம்சங் போன் தண்ணீரால் டேமேஜ் ஆனதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?

சாம்சங் மாடல்களில் பழைய ஐபோன் மாடல்களில் இருப்பது போன்று பேட்டரியில் எல்.சி.ஐ இருக்கும். இந்த எல்.சி.ஐ சிகப்பு அல்லது பிங்க் கலரில் மாறினால் அது தண்ணீரால் டேமேஜ் ஆகிவிட்டது என்று அரித்தம்

ஸ்மார்ட்போன் அடிப்புறத்திலும் செக் செய்ய வேண்டும்

ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களில், அடிப்பகுதியில் பேட்டரி கவருடன் எல்.சி.ஐ வைக்கப்பட்டிருக்கும். இதை வைத்து அந்த ஸ்மார்ட்போன் தண்ணீரால் டேமேஜ் ஆகியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க முடியும்,.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
There is a water sensor on smartphones that can check if your smartphone or its battery have suffered water damage. Take a look at this content to know more on how you can use it.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்