உடையாத திரை கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமா.??

Written By:

ஸ்மார்ட்போன் கீழே போட்டிருக்கின்றீர்களா என கேட்டால் பெரும்பாலானோரின் பதில் நிச்சயம் ஆம் என்பதாகவே இருக்கும்.

அனைவரும் ஒரு முறையேனும் தங்களது கருவிகளை கீழே போட்டிப்பர். தவறுதலாக நடைபெற்றாலும் இதை சரி செய்ய நிச்சயம் பல ஆயிரங்களை செலவிட வேண்டும். ஒரு முறை விழுந்தால் பரவாயில்லை, ஆனால் எப்பவும் கீழே விழுந்தால் அடிக்கடி சரி செய்ய முடியுமா என்ன.??

இன்று வெளியாகும் கருவிகளில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும் யாரும் திரையின் மேல் கவனம் செலுத்துவதில்லை. இதனால் தான் என்னமோ அடிக்கடி திரையில் கீறல் மற்றும் உடைவது போன்றவை ஏற்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே

ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கருவி மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் தான். தவறுதலாக கீழே விழுந்தால் திரையில் விரிசல் ஏற்படாமல் இருக்க ஐந்து அடுக்கு பாதுகாப்பான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 810 சிப்செட்

இந்த கருவியானது குவால்காமின் உயர் ரக ஸ்னாப்டிராகன் 810 எஸ்ஓசி மற்றும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் அட்ரினோ 430 ஜிபியு கொண்டிருக்கின்றது.

கேமரா

இந்த கருவியில் 21 எம்பி ப்ரைமரி கேமராவும், 1/2.4" சோனி IMX 230 சென்சார் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் f/2.0 லென்ஸ் பயன்படுத்துகின்றது.

செல்பீ

இந்த கருவியில் 5 எம்பி செல்பீ கேமரா, வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 1.4um இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படம் எடுக்க முடியும்.

மெமரி

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் 32ஜிபி / 64ஜிபி இன்டர்னல் மெமரி என இரு மாடல்கள் இருக்கின்றது. இருந்தும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை 200ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

பேட்டரி

சுமார் 3760 எம்ஏஎச் பேட்டரி வழங்கியிருப்பதால் சராசரி பயன்பாடுகளிலும் 48 மணி நேரம் பேக்கப் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

க்விக் சார்ஜிங்

அதிக திறன் கொண்ட பேட்டரி பொதுவாக சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும், ஆனால் மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் க்விக் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டிருப்பசால் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு டாக்டைம் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியில் PMA மற்றும் Qi போன்ற வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் சப்போர்ட் செய்கின்றது. இருந்தும் வயர்லெஸ் சார்ஜிங் பேடினை வாடிக்கையாளர்கள் தனியாகவே வாங்கி கொள்ள வேண்டும்.

வாட்டர் ரெசிஸ்டன்ட்

இந்த கருவியில் வாட்டர் ப்ரூஃப் வசதி கிடையாது ஆனால் நானோ-கோட்டிங் செய்யப்பட்டிருப்பதால் தவறுதலாக தண்ணீர் சேதங்களை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறம்

இந்த கருவி பல்வேறு நிறங்களில் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மாடல்களில் கிடைக்கின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Want a smartphone with screen that really won't break Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்