ஐபோன் 7 வடிவமைப்பில் வி5 ப்ளஸ் : விலை, அம்சங்கள் மற்றும் பல.!

வெளியாகியுள்ள விவோ வி5 ப்ளஸ் அக்கருவியின் அம்சங்களுடன் சேர்த்து வி5 லைட் ஸ்மார்ட்போன் பற்றிய விரிவான விவரங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே இது.

|

விவோ வி5 துவக்க விழாவில், விவோ இந்தியா நிறுவனம் அதன் அடுத்த கருவியான வி5 பிளஸ் பற்றிய ஒரு துணுக்கையும் சேர்த்தே வெளியிட்டார்கள். இப்போது விவோ வி5 பிளஸ் கருவியின் வெளியீட்டு தேதி ஜனவரி 23-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சுவாரசியம் என்றால் இக்கருவி சார்ந்த குறிப்புகள் ஏற்கனவே விவோ உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் விவரிக்கப்பட்டுவிட்டன என்பது தான்.

வெளியாகியுள்ள விவோ வி5 ப்ளஸ் அக்கருவியின் அம்சங்கள் என்ன என்பதுடன் சேர்த்து வி5 லைட் ஸ்மார்ட்போன் பற்றிய விரிவான விவரங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே இது.

டூவல் செல்பீ கேமரா

டூவல் செல்பீ கேமரா

விவோ வி5 ப்ளஸ் கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் புதிய அனைத்து உலோக உடல் மற்றும் வி5 கருவியோடு ஒப்பிடும்போது நல்ல செல்பீகளுக்காக டூவல் செல்பீ கேமரா தொகுதி கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

உடன் இக்கருவியின் வடிவமைப்பானது மெல்லியதாக தோன்றுகிறது மற்றும் பிளாஸ்டிக்கில் ஆன வி5 போலல்லாமல் இக்கருவி உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளது. ஆக வெளிப்படையாக இக்கருவி அதே அதிக விலை நிர்ணயம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்

2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்

ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே

இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் அது லெனோவா பி2 கருவிக்கு பிறகு ஒரு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் இரண்டாவது கருவியாக இது திகழ்கிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம், ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் இரட்டை முன்பக்க கேமரா ஆகியவைகளும் இக்கருவியை அடக்கம்.

கேமிரா

கேமிரா

முன்னதாக விவோ வி5 சாதனம் ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பு கொண்டுருந்தது. அது எப் / 2.0 துளை மற்றும் 5பி லென்ஸ் அமைப்பு கொண்ட சோனி ஐஏஎக்ஸ்376 கொண்ட ஒரு 20எம்பி சென்சார் மற்றும் 1 / 2.78 அங்குல சென்சார் கொண்ட ஒரு 8எம்பி கேமிராவாக திகழ்கிறது. இதிலிருந்து 'பொக்கே' விளைவுபெற்று விவோ வி5 பிளஸ் கருவியில் ஒப்பீட்டளவில் இதே போன்ற கேமிரா அமைப்பு இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி, சேமிப்பு

பேட்டரி, சேமிப்பு

மற்ற அம்சங்கள்ளை பொருத்தமட்டில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 128ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவு, வேகமான சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3160எம்ஏஎச் பேட்டரி, 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு வசதிகள் உடன் ஹோம் பட்டனில் கைரேகை ரீடர் ஆகியவைகளும் இக்கருவியில் அடக்கம்.

மலிவான விலை

மலிவான விலை

அறிமுகமாகவுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன விவோ வி5 லைட் கருவியானது தற்போது கிடைக்கும் விவோ வி5 கருவியை விட ஒரு மலிவான விலை பதிப்பாக இருக்க வேண்டும். அம்சங்களை பொருத்தமட்டில் இக்கருவி எச்டி தீர்மானம், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பு (128ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவு) மற்றும் உள்ளே ஒரு 64-பிட் அக்டா-கோர் செயலி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்னின் சிறப்பம்சமாக நீங்கள் செல்பீ புகைப்படத்தின் லைட்டிங்கை கட்டுப்படுத்தக்கூடும்அம்சம் திகழ்கிறது.

பேட்டரி, கேமரா

பேட்டரி, கேமரா

கேமரா துறையில் ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் 16எம்பி முன்பக்க கேமராவை இக்கருவி வழங்குகிறது மற்றும் வழக்கமான 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளுடன் சேர்ந்து ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆதரவு சேர்ந்த எஃப்எம் ரேடியோ பொதிகள்.

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

வி5 லைட் கருவியானது தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண மாறுபாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது மறுபக்கம் விவோ வி5 பிளஸ் கருவி தங்க நிற மாறுபாட்டில் மட்டுமே வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் 7 மாடலுக்கு இணையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo V5 Plus and V5 Lite go official ahead of 23 January launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X