ஆண்ட்ராய்டு விட்ஜெட்ஸ் பற்றி சில தகவல்கள்..!

By Keerthi
|

இன்றைக்கு கைகளில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது முதல் இடத்தில் உள்ளது.

மேலும், பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.

நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனம் எதனையும் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலும், இது குறித்து அறிந்திருப்பது நல்லதே. ஏனென்றால், என்றாவது ஒரு நாள், கூடிய விரைவிலேயே ஆண்ட்ராய்ட் கொண்டுள்ள சாதனம் ஒன்றினை உங்களுக்கென நீங்கள் இயக்கும் நாள் வரலாம்.

ஆண்ட்ராய்ட் திரையில், புரோகிராம் ஐகான்களாகக் காட்டப்படுகின்றவையே விட்ஜெட் ஆகும். ஆனால், பெர்சனல் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது.

விட்ஜெட் கொண்டுள்ள புரோகிராம், அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொண்டு, விட்ஜெட்டில் அதனைக் காட்டும். எடுத்துக் காட்டாக, காலண்டர் கொண்டுள்ள ஒரு விட்ஜெட், வரப்போதும் நிகழ்வுகள் குறித்து உங்களுக்குக் காட்டும்.

அப்போதைய நேரத்தைக் காட்டும் கடிகாரமும் ஒரு விட்ஜெட் தான். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிலேயே இடம் பெற்றவையாக சில விட்ஜெட்டுகள் உள்ளன. சில கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட புரோகிராம்களின் பிரதிநிதியாகவும் உள்ளன.

#1

#1

உங்களுடைய சாதனத்தில், எந்த புரோகிராம்களின் சார்பாக இந்த விட்ஜெட்கள் இடம் பெற்றுள்ளன என்று பார்க்க ஆசையா! உங்கள் சாதனத்தில், ஹோம் திரைக்குச் செல்லவும் அங்கு அப்ளிகேஷன் லிஸ்ட் ஐகானைத் தட்டவும்.

#2

#2

இந்த ஐகான் நான்கு சிறிய சதுரக் கட்டங்கள், நான்கு வரிசையாகவோ, இரண்டு வரிசையில், வரிசைக்கு மூன்று சதுரங்களாகவோ அமைக்கப்பட்டிருக்கலாம். இதனை டேப் செய்தால் கிடைக்கும் திரையில், மேலாக இரண்டு டேப்கள் இருப்பதைக் காணலாம்.

#3

#3

ஒன்று அப்ளிகேஷனுக்காகவும் (Apps) இன்னொன்று விட்ஜெட்டுகளுக்காகவும் (Widgets) இருக்கும். இதில் விட்ஜெட் டேப்பினைத் தட்டித் திறந்தால், உங்கள் சாதனத்தில் பதியப்பட்டுள்ள சாதனங்களுக்கான விட்ஜெட்டுகள் அகர வரிசைப்படி காட்டப்படுவதனைப் பார்க்கலாம்.

#4

#4

நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால், அவற்றிற்கான விட்ஜெட்டுகள் இங்கு இடம் பெறும். இந்த திரையில், இடது வலதாக விரலால் தேய்த்திடும் போது, அனைத்து விட்ஜெட்களையும் காணலாம்.

#5

#5

விட்ஜெட் ஒன்றினை, உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஹோம் திரையில் அமைக்க வேண்டும் எனில், விட்ஜெட் ஐகானின் மீது அழுத்தியவாறு சில நொடிகள் இருக்கவும். அந்த விட்ஜெட் பாப் அவுட் ஆகி, உங்களுடைய ஹோம் திரை காட்சி அளிக்கும்.

#6

#6

இந்த திரையில், மேலாக ஒரு கட்டம் கோட்டினால் அமைக்கப்பட்டு காட்சி அளிக்கும். இந்தக் கட்டத்தினுள்ளாக, நீங்கள் ஹோம் ஸ்கிரீனில் அமைக்க விரும்பும் ஐகான் எங்கு பொருந்தும் எனக் காட்டப்படும்.

#7

#7

தொடர்ந்து அந்த விட்ஜெட்டினைப் பிடித்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, காட்டப்படும் இடத்தில் அமைக்கலாம். விட்ஜெட்கள் வழக்கமான ஐகான்களைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருப்பதால், மற்ற புரோகிராம் ஐகான்கள், சற்று நகர்ந்து இந்த விட்ஜெட் ஐகானுக்கு, ஹோம் ஸ்கிரீனில் இடம் கொடுக்கும்.

#8

#8

உங்களுடைய ஹோம் ஸ்கிரீனில், ஏற்கனவே அதிகமான எண்ணிக்கையில் ஐகான்கள் இடம் பெற்று, புதிய விட்ஜெட்டுக்கு இடம் இல்லை எனில், இதற்கென நீங்கள் முயற்சிக்கையில், ஓர் எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.

#9

#9


இந்த வேளையில், அடுத்த ஹோம் ஸ்கிரீனுக்கு நீங்கள் விட்ஜெட்டினைக் கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். இதற்கு அந்த விட்ஜெட்டினை அழுத்திப் பிடித்தவாறு, வலது அல்லது இடது ஓரத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டியதிருக்கும்.

#10

#10


அல்லது, ஏற்கனவே உள்ள ஐகான்களை, அதன் மீது சற்று நேரம் அழுத்தியவாறு இருக்க வேண்டும். பின்னர், அதனை X அல்லது Remove என்று திரை மேலாக உள்ள இடத்திற்கு இழுத்துச் சென்று விட்டுவிட வேண்டும்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X