அதிரடி காட்டும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் : வேகம் மற்றும் அதீத சக்தி கொண்டது.!!

Written by: Super

லீஈகோ நிறுவனத்தின் லீ 1எஸ் கருவி இந்திய சந்தையை புரட்டி போட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். குறைந்த கால அளவில் இந்திய விற்பனையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றது. ஜனவரி மாதம் வெளியான இந்த கருவி இந்திய சந்தையில் ரூ.10,999க்கு வெளியானதோடு அதிக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கின்றது.

அதிரடி காட்டும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் : வேகம்,அதீத சக்தி கொண்டது.!!

அப்படியாக இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் அம்சம் தான் டைப்-சி சார்ஜர். சுமார் 5 நிமிட சார்ஜ் செய்தால் போதும் கருவியை அதிகபட்சம் 3.5 மணி நேர டாக்டைம் பெற முடியும். குறைந்த விலையில் யுஎஷ்பி டைப்-சி சார்ஜர் வேகமாக சார்ஜ் செய்வதோடு தகவல் பரிமாற்றத்தையும் அதிவேகமாக மேற்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

யுஎஸ்பி டைப்-சி அதிவேக மின்சாரத்தை பரிமாற்றும் திறன் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக கருவியானது அதிவேகமாக சார்ஜ் ஆகிவிடும். லீ 1எஸ் கருவி 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருப்பதால் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த கருவியானது கச்சிதமான தேர்வாக இருக்கும்.

தகவல் பரிமாற்றம்

யுஎஸ்பி டைப்-சி டேட்டா என்கோடிங் வேலையை சுலபமாக்குவதால் தகவல்கள் அதிவேகமாக பரிமாற்றம் செய்யப்படுகின்றது. யுஎஸ்பி டைௌப்-சி பேக்வேர்டு கம்பாடிபிள் வசதி கொண்டிருப்பதால் யுஎஸ்பி அடாப்டர் கொண்டு கணினி அல்லது லேப்டாப் கருவிகளோடு இணைத்து கொள்ள முடியும்.

பயன்பாடு

தற்சமயம் பயன்பாடுகளில் இருக்கும் மைக்ரோ யுஎஸ்பி போன்று இல்லாமல் ரிவர்சிபிள் யுசேஜ் வழங்கப்பட்டிருப்பதால் .யுஎஸ்பி டைப்-சி கேபிளை எந்த புறமாகவும் நுழைக்க முடியும்.

எதிர்காலம்

இனி வரும் கருவிகளிலும் யுஎஸ்பி டைப்-சி வழங்கப்படுவதோடு மைக்ரோ யுஎஸ்பி காலம் மெல்ல மாறி வருகின்றது என்றே கூற வேண்டும். இன்னும் சில மாதங்களில் யுஎஸ்பி டைப்-சி கொண்ட கருவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஷாட் ப்ரூஃப்

லீ டைப்-சி சார்ஜர்களில் தூசி மற்றும் ஷாட் சர்க்யூட் ப்ரூஃப் வழங்கப்பட்டுள்ளதால் எக்காரணத்தை கொண்டும் இதன் மூலம் வெடித்தல், மற்றும் தீ அபாயங்கள் இருக்காது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
USB Type-C Connector: Simpler, faster, futuristic and more powerful
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்