யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள் என்னென்ன?

By Super Admin
|

ஆப்பிள் அண்மையில் தன்னுடைய புதிய வரவுகளான முத்திரைப்பதித்த ஐபோன்-7 மற்றும் ஐபோன் 7-ப்ளஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு போன்களும் பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்து வாங்கி கொள்ளலாம்.

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

பல்வேறு விமர்சனங்கள் உலகம் முழுவதும் பலவாறாக கூறப்பட்டு வந்தாலும் 3.5எம்எம் ஹெட்போன் சாகேத் இல்லாதது மிகப்பெரும் குறையாகத் தோன்றுகிறது. ஆப்பிள் இதனை தன்னுடைய லைட்டனிங் போர்ட் மூலம் சரிசெய்துவிட்டதாகக் கருதுகிறது. இது நல்ல ஒலித்தரத்தை அளிப்பதுடன் வயர்லெஸ் தொழில்நுட்ப சந்தையை உருவாக்கும் என கருதப்படுகிறது.

ஏர்டெல், வோடபோன், ஐடியாவின் ஜியோவிற்கு எதிரான 'கவுண்டர் அட்டாக்'..!

உங்களுக்கு நினைவூட்ட, ஆப்பிள்தான் முதன் முதலில் திருப்பிக் கூடிய ரிவெர்சிபிள் பிளக் வசதியை நமக்காக 2012 ஆம் ஆண்டு ஏற்கனவே இருந்த 30 பின் கனெக்டர் பயன்பாட்டை நிறுத்தி 8 பின் லைட்டனிங் கனெக்டரை அறிமுகம் செய்தபோது கொண்டுவந்தது.

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

யுஎஸ்பி இந்த வசதியை அண்மையில் அறிமுகம் செய்த யுஎஸ்பி டைப் சி வரும் வரை இந்த வசதியை அளிக்க இயலவில்லை. இந்த வசதி இன்னும் முழுப் பயன்பாட்டிற்கு வரவில்லையென்றாலும் அனைத்து பிரபல ஸ்மார்ட் போன் நிருவனங்களும் இந்த வசதியை கொண்டுவரவிருப்பதால் விரைவில் அனைத்து ஆண்டிராய்டு போன்களிலும் இது ஒரு தவிர்க்க இயலாத வசதியாக இருக்கும் என நம்பலாம்.

ஐபோன் 7 கருவிகளுடன் ஒரு ஆண்டிற்கு இலவச ஜியோ சேவை!

எனவே இப்போது யுஎஸ்பி டைப்-சி மற்றும் ஆப்பிளின் லைட்டனிங் கனெக்டர் ஆகியவற்றிற்கு இடையேயான ஒற்றுமை-வேற்றுமைகளை அலசி இது நுகர்வோரான உங்களை எவ்வாறு பாதிக்கும் எனப் பார்க்கப்போகிறோம்.

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

இந்தப்பக்கம் வேண்டுமானாலும் அதனை பிளக் செய்யலாம்

இரண்டுமே உங்கள் ஸ்மார்ட் போனில் எந்த பக்கமும் செருகும்படி உள்ளது. இதற்கு முன் மைக்ரோ யுஎஸ்பி ஒரு பக்கம் மட்டுமே செருகும்படி அமைக்கப்பட்டிருந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் பல்வேறு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் போர்டை பல்வேறு வகையில் வடிவமைப்பதால் அதை கவனித்து செய்ய வேண்டியிருந்தது. ஒரே போனை வைத்திருந்தவர்கள் இதனை கவனித்திருக்க வாய்ப்பில்லை எனும் வேளையில் அடிக்கடி தங்கள் போனை மாற்றுபவர்கள் இதனை கவனித்தே ஆகவேண்டும்.

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

நல்லவேளை இந்த யுஎஸ்பி டைப் சி மூலம் இந்த கஷ்டம் இனிவரும் காலங்களில் இருக்காது. இந்த சிறு மாற்றங்கள் ஒட்டு மொத்த அனுபவத்தில் இன்னும் வசதியைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

வடிவமைப்பு மற்றும் ஆயுட்காலம்

இதை இந்தப் புறம் வேண்டுமானாலும் பொருத்தலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் இவை முற்றிலும் மாறுபட்ட வகையில் உங்கள் ஸ்மார்ட் போனுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன.

எஸ்எம்எஸ் மூலம் 1ஜிபி இலவச வோடபோன் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

யுஎஸ்பி டைப் "சி" உங்கள் போனின் (அல்லது வேறு ஏதாவது கருவியின்) உட்புறம் உள்ள பின்களில் தொடர்பை ஏற்படுத்தும்போது. லைட்டனிங் கனெக்டர் பின்கள் கேபிளிலேயே உள்ளது. இரண்டு வடிவமைப்புகளுக்கும் அவற்றிற்கே உரிய பல்வேறு சாதக பாதகங்கள் பற்றி நாம் மேலும் பார்க்கலாம்.

ஆயுட்காலத்தைப் பொறுத்த மட்டில் ஆப்பிளின் லைட்டனிங் கனெக்டர்கள் கொடுமையானவை. திரும்பவும் சொல்கிறோம் ரொம்பக் கொடுமை! ஆப்பிள் தங்களுடைய கேபிள் தரத்தை உயர்த்த வேண்டியது மிகவும் முக்கியம். இன்னொரு பக்கம் யுஎஸ்பி டைப் சி கேபிள்கள் தரம் முழுவதும் உற்பத்தியாளரை பொறுத்து அமைந்தாலும் ஓரளவிற்கு நல்ல தரத்துடன் வருகின்றன

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யுஎஸ்பி டைப் சி மற்றும் ஆப்பிள் லைட்டனிங் கனெக்டர் - வித்தியாசங்கள்

சாதக பாதகங்கள்

யுஎஸ்பி- டைப் சி கனெக்டர் வடிவமைப்பு பின்களையம் கனெக்டர்களையும் பாதுகாக்கும் வண்ணம் அமைந்திருந்தாலும் கனெக்டர் சற்று தடிமனாக இருப்பதால் அது உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பின்களை சேதமடையச் செய்யும் வாய்ப்பிருக்கிறது (நீங்கள் மிகவும் கடினமாக அழுத்தினால்). எனினும் நீங்கள் கவனமாக இருந்தால் அதற்கு வாய்ப்பில்லை.

இன்னொருபுறம் லைட்டனிங் கேபிள்கள் வெளியில் தெரியும்படி அமைந்திருப்பதால் தூசு அழுக்கு மற்றும் வெளிப்புற காரணங்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

யுஎஸ்பி- டைப் சி கனெக்டர் 100 வாட்டுகள் வரை தாங்கக்கூடிய (20 வோல்ட் மற்றும் 5 ஆம்ப்ஸ்) வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள பெரும்பாலான ஸ்மார்ட் போன் சார்ஜர்கள் 5 அல்லது 10 வாட் (5 வோல்ட் மற்றும் 1 அல்லது 2 ஆம்ப்ஸ்) மட்டுமே தாங்கும்.

இதில் குறிப்பிடவேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் யுஎஸ்பி டைப் சி மூலம் லாப்டாப்-களையும் சார்ஜ் செய்ய முடியும். ஆப்பிளின் மாக்புக் நினைவிருக்கிறதா?

மேலும், டைப் சி அதிக வேகத்தில் டேட்டாவை அனுப்பப் கூடியது (10 ஜிபீபிஎஸ்)

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple recently launched its latest iteration of flagships, the iPhone 7 and 7 Plus. Both of them will be available for pre-orders starting from tonight on Flipkart.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X