Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அதிகார பூர்வ அறிவிப்பின்றி ஆன்லைனில் தலைகாட்டிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

Updated: Tuesday, March 26, 2013, 14:28 [IST]

unannounced motorola atrix hd appears its company online

மோட்டோரோலாவின் ஏட்ரிக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமான அறிவிப்பு இல்லாமல், மோட்டரோலாவின் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்று தகவல்கள் கூறுகிறது.

அதாவது அதிகார பூர்வ அறிவி்பபு இல்லாமல் ஆன்லைன் வலைத்தளத்தில் வெளியானதால், இந்த ஸ்மார்ட்போனில் புதுமையான தொழில் நுட்பங்கள் ஏதும் இல்லை போலும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனால் இந்த ஏட்ரிக்ஸ் எச்டி ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினையும் பார்க்கலாம்.

மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது. இதில் புதிய தொழில் நுட்பமாக 3 மைக் உள்ளது. இது சிறந்த வகையில் ஆடியோவினை துல்லியமாக வழங்கும். அதாவது இரைச்சல் இல்லாமல் ஒலியினை வெளிப்படுத்தும்.

ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.

இதில் இன்னும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது. 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

அதிகார பூர்வமான அறிவிப்பு இல்லாமல் ஆன்லைன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்ற இந்த பரபரப்பு தகவல் பற்றிய விளக்கத்தினை மோட்டோரோலா நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published:  Tuesday, July 10, 2012, 18:00 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll