இந்த போன் 'எதுவும்' ஆகாது...!!

By Meganathan
|

மக்களின் தொலைதொடர்பு முறையில் புரட்சியை ஏற்படுத்திய கருவிகளில் மொபைல் போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. முதலில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்த மொபைல் போன்களில் பின் குறுந்தகவல், மின்னஞ்சல், என பல்வேறு அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன.

மக்களுக்கு பயனளித்த, தொடர்ந்து பயனயளித்து கொண்டிருக்கும் மொபைல் கருவிகளின் வளர்ச்சி தற்சமயம் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் இருக்கின்றது என்பது தான் உண்மை. இதற்கு முக்கிய காரணம் அவைகளில் வழங்கப்பட்டிருக்கும் எல்லையில்லா அம்சங்களே தவிற வேறு எதுவும் கிடையாது.

அந்த வகையில் இன்றைய மொபைல் போன் கருவிகளில் அச்சமூட்டும் விதமாக இருப்பது அவைகளின் பாதுகாப்பு தான். அழைப்புகளில் துவங்கி இன்று பொருட்களை வாங்குவது வரை அனைத்திற்கும் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அவைகளை பாதுகாக்கும் முயற்சியில் கண்டறியப்பட்டிருக்கும் கருவி தான் ட்யூரிங் போன். கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய ட்யூரிங் போன் குறித்த தகவல்களை பாருங்கள்..

ட்யூரிங்

ட்யூரிங்

ட்யூரிங் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் தான் 'ட்யூரிங்'

ப்ரூஃப்

ப்ரூஃப்

இந்த ஸ்மார்ட்போனினை உடைக்க முடியாது, ஹேக் செய்ய முடியாது, முற்றிலும் வாட்டர் ப்ரூஃப் போன்.

நீர்

நீர்

ட்யூரிங் போனினை 24 மணி நேரமும் நீரில் வைத்தாலும் எதுவும் ஆகாது.

ஆடம்பரம்

ஆடம்பரம்

சந்தையில் கிடைக்கும் ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி, ஃபெராரி ப்ரியர்களுக்கு இந்த கருவி புதிய மாற்றாக இருக்கும்.

விலை

விலை

இத்தனை அம்சங்கள் இருக்கும் இந்த கருவியின் துவக்க விலை ரூ.38,751.74. இதன் முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்குகின்றது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த கருவியில் சிங்கிள் ப்ரோப்பரைட்ரி ஜாக் பயன்படுத்தப்படுவதோடு கஸ்டமைஸ்டு ஆண்ட்ராய்டு இயங்குதளமும் முற்றிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. இதோடு இந்த கருவி தனது சொந்த க்ரிப்டோகரன்ஸியான ட்யூரிங் காயின் கொண்டிருக்கின்றதோடு கைரேகை-ரீடர் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

லிக்விட்மார்ஃபியம்

லிக்விட்மார்ஃபியம்

ஐபோன் 6 கருவியில் பயன்படுத்தப்பட்ட இம்முறை இந்த கருவியை எந்த ஒரு சூழ்நிலையிலும் தாங்கும் படி பார்த்து கொள்ளும். இம்முறையில் செம்பு, அலுமினியம், நிக்கல், சில்வர் போன்றவை கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

இந்த கருவியின் உள்பாகங்களில் ஹைட்ரோஃபோபிக் நானோ கோட்டிங் இருப்பதால் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் கிடைக்கும். மேலும் இந்நிறுவனம் IPX8 ரேட்டிங் பெற்றுள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர், 3ஜிபி ரேம், 5.5 இன்ச், 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளமும் கொண்டிருக்கின்றது.

நிறம்

நிறம்

மூன்று வித நிறம் மற்றும் 16, 64, 128ஜிபி மெமரிகளில் கிடைப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமராவும் கொண்டிருக்கின்றது. இதன் முன்பதிவு ஜூலை மாதம் 31 ஆம் தேதி துவங்குகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Turing Robotics prepares an unbreakable, unhackable, waterproof phone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X