இந்த வார டாப் 10 : இந்திய சந்தையை ஆக்கிரமித்த கருவிகள்..!!

Written By:

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வியாபாரத்தை பட்டி தீட்டும் நோக்கில் புதிய வியூகங்களுடன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பண்டிகை கால விற்பனைக்கு தயாராகி வருகின்றது. இதை உறுதி செய்யும் வகையில் தான் உலகின் பிரபல நிறுவனங்களும் தங்களது பெரிய கருவிகளை அறிவித்திருக்கின்றன.

சாம்சங், ஆப்பிள், கூகுள் என பெரிய நிறுவனங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல கருவிகள் இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் விற்பனைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எல்ஜி நெக்சஸ் 5

எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய நெக்சஸ் கருவி சந்தையில் ஆப்பிள் ஐபோன்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூவாய் நெக்சஸ் 6பி

ஆப்பிள் கருவிகளுக்கு நேரடி போட்டி அளிக்கும் வகையில் நெக்சஸ் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ் ஸ்டைல்

சந்தையில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில் மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய கருவியை அதிகம் மேம்படுத்தி அறிமுகம் செய்திருக்கின்றது.

லூமியா 950

சாம்சங், ஆப்பிள், சோனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நேரடி போட்டி வழங்கும் வகையில் இந்த கருவியின் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

லூமியா 950 எக்ஸ்எல்

சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 950 எக்ஸ்எல் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் என சந்தையில் பலத்த போட்டியை வழங்க காத்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

லூமியா 550

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

லூமியா 640 எக்ஸ்எல் எல்டிஈ

5.7 இன்ச் எச்டி எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ள இந்த கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா போன்ற சிறப்பம்சங்களோடு இதன் விலை ரூ.15,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் ஹானர் 7

அதிக சிறப்பம்சங்களுக்கு ஏற்ப சரியான விலை இந்த கருவியை பிரபலமாக்கி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

மெய்ஸூ எம்2

ரூ.7000 பட்ஜெட்டில் இந்திய வாடிக்கையாளர்களை குறி வைத்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த கருவியில் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

எச்டிசி ஒன் ஈ9எஸ்

சமீபத்தில் வெளியானதில் ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த கருவியாக எச்டிசி ஒன் ஈ9எஸ் விளங்குகின்றது.

தமிழ் கிஸ்பாட்

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Top 10 Smartphones recently launched in India. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்