வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்!

By Super Admin
|

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் ஒரு மொபைல் போன் வாங்கினலும் அந்த மொபைல் போனில் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அதனால் என்ன பயன் பாஸ். அதேபோல ஒருசில மொபைல் போன்களில் நீங்கள் மணிக்கணக்கில் சார்ஜ் ஏற்ற பிளக்கில் சொருகியிருந்தாலும் 2 அல்லது 3 பர்செண்ட்தான் சார்ஜ் ஏறியிருக்கும்.

வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள்

நீங்கள் ஒரு இமெயிலையோ அல்லது எஸ்.எம்.எஸ்-ஐ படித்தாலோ உடனே போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடும்.

புதிய அத்தியாயம் படைத்த சூப்பர் டிவி விற்பனை.!

இதுபோன்ற அசெளகரியமான நிலையை தவிர்க்க ஸ்மார்ட் போனில் விரைவாக சார்ஜ் செய்வது எப்படி என்ற ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களை போல மகிழ்ச்சியானவர் யாரும் இல்லை.சரி! இனி சரியான முறையில் மிக வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி என்று பார்போமா?

வயர்லெஸ் சார்ஜருக்கு ஒரு நோ!

வயர்லெஸ் சார்ஜருக்கு ஒரு நோ!

முதலில் வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்த வேண்டாம். விரைவாக சார்ஜ் செய்ய கேபிள் சார்ஜர்தான் பெட்டர். இதேபோல் USB சார்ஜரும் வேலைக்கு ஆகாது. வேறு வழியே இல்லாதபோது இதுபோன்ற சார்ஜரை பயன்படுத்தலாமே தவிர, விரைவாக சார்ஜ் ஏற வேண்டும் என்றால் சுவற்றில் இருக்கும் பிளக் மூலம் சார்ஜ் ஏற்றுங்கள்

ஸ்பீட் சார்ஜரை தேர்வு செய்யுங்கள்

ஸ்பீட் சார்ஜரை தேர்வு செய்யுங்கள்

தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட் போன் உடனும் விரைவாக சார்ஜ் செய்யும் சார்ஜர்கள் இணைக்கபட்டிருக்கும். இல்லாவிடில் ஸ்பீட் சார்ஜரை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்

சுவர் பிளக்கை மட்டும் பயன்படுத்துங்கள்

சுவர் பிளக்கை மட்டும் பயன்படுத்துங்கள்

லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் சார்ஜ் செய்ய வேண்டாம். ஒரு ஸ்மார்ட்போனுக்கு தேவையான மின்சாரத்தை இவை கொடுக்க வாய்ப்பில்லை. எனவே சுவற்றில் பதிவு செய்யப்பட்ட பிளக்கில் மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்

சுவிட்ச் ஆப் செஞ்சா ரொம்ப நல்லது

சுவிட்ச் ஆப் செஞ்சா ரொம்ப நல்லது

முடிந்தால் சார்ஜ் செய்யும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சார்ஜில் போடுங்கள். அல்லது அட்லீஸ்ட் ஏர்பிளேன் மோடில் வைத்தாவது சார்ஜ் போடுங்கள். ஆனால் முக்கியமான அழைப்போ அல்லது தகவலோ வரவேண்டிய நிலை இருந்தால் இவற்றை நீங்கள் தவிர்த்துவிடலாம். .

ஏர்பிளேன் மோடுக்கு மாற்றுங்கள்:

ஏர்பிளேன் மோடுக்கு மாற்றுங்கள்:

நீங்கள் உங்கள் மொபைல் போனை சார்ஜ் போடும் முன்னர் கண்டிப்பாக ஏர்பிளேன் மோடுக்கு மாற்ற வேண்டும். ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வதால் உங்கள் போனில் உள்ள வயர்லெஸ் ரேடியோ உள்பட பல இணைப்புகளை கட் செய்துவிடும்.

சேவிங் மோட்-ஐ ஆன் செய்யணும்:

சேவிங் மோட்-ஐ ஆன் செய்யணும்:

ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் பவர் சேவிங் மோட் என்ற ஆப்ஷன் இருக்கும். நீங்கள் இதை ஆன் செய்தால் உங்கள் மொபைல் போனில் உள்ள சார்ஜ் கெப்பாசிட்டி பாதுகாக்கப்படும்.

தேவையில்லாததை தூக்குங்கள்

தேவையில்லாததை தூக்குங்கள்

மேலும் உங்கள் போன் சார்ஜில் இருக்கும்போது வைஃபை, ஜிபிஎஸ், புளுடூத் ஆகியவற்றை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மொபைல் போனில் ஏறும் சார்ஜை இவைகள் சாப்பிட்டுவிடும் அபாயம் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Well, you can do it by knowing some tricks that will help you charge your Android battery faster. Here is our guide to charge your Android smartphone faster so that it is useful in case of any emergency.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X