ஓவர் சீன் போட்ட ஐபோன் 7, ஓரங்கட்டியது ஒரு ஸ்மார்ட்போன்.!

மிகவும் முக்கியமான ஸ்மார்ட்போன் கேமராக்கள் சார்ந்த அதன் வருடாந்திர முடிவுகள் வெளியானது.!

|

"ஹலோ இது ஆப்பிள் ஐபோன்.. இதோட கேமரா க்வாலிட்டி என்னனு தெரியுமா.? டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையா போட்,டோ எடுக்கலாம்..!" என்று இனி யாரேனும் உங்களிடம் ஓவர் சீன் போட்டால், கொஞ்சம் கூட யோசிக்காமல் வாய்விட்டு சிரித்து விடுங்கள்.

ஓவர் சீன் போட்ட ஐபோன் 7, ஓரங்கட்டியது ஒரு ஸ்மார்ட்போன்.!

2011-ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் தங்கள் ஐபோன்களில் சிறந்த கேமராக்கள் கொண்டுள்ள ஒரு கருவியாக அறியப்பட்டு வருகிறது குறிப்பாக அதன் ஐபோன் 4எஸ் கருவி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் கேமரா அம்சத்தை வெற்றிகரமாக கையாண்டு வருகிறது.

வருடாந்திர முடிவு

வருடாந்திர முடிவு

டெக்ஸ்ஓமார்க் என்ற புகழ்பெற்ற கேமரா ஒப்பீடு வலைத்தளமானது சமீபத்தில் உயர் இறுதியில் டிஜிட்டல் கேமராக்களுடன் சேர்த்து மிகவும் முக்கியமான ஸ்மார்ட்போன் கேமராக்கள் சார்ந்த அதன் வருடாந்திர முடிவுகளை வெளியிட்டது.

87 மதிப்பெண்கள்

87 மதிப்பெண்கள்

அந்த முடிவுகளின் படி ஹூவாய் பி 10 கருவியானது ஒட்டுமொத்த கேமரா சோதனை அறிக்கைகளின் முடிவில் ஈர்க்கக்கூடிய 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அதே தேர்வில் ஒப்பிடுகையில், ஐபோன் 7 கருவியானது 84 மதிப்பெண்களும் ஐபோன் 7 பிளஸ் கருவியானது 86 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.

தோற்கடிக்கும் வண்ணம்

தோற்கடிக்கும் வண்ணம்

பெருமைபாடிக்கொள்ளும் வலிமைமிக்க ஆப்பிள் ஐபோன் கேமராளுக்கு நிகரான வண்ணம் சில ஆண்ட்ராய்டு கருவிகளும் சந்தையில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆப்பிள் ஐபோன் கேமராவை தோற்கடிக்கும் வண்ணம் ஒரு கேமரா அம்சம் கொண்ட மொபைல் உள்ளதென்றால் அது ஹூவாய் பி 10 ஸ்மார்ட்போன் தான்.!

தவிர்த்து இந்த சோதனையில்

தவிர்த்து இந்த சோதனையில்

ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை தவிர்த்து இந்த சோதனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ், சோனி எக்ஸ்பீரியா இசெட்5 , எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் மற்றும் மோட்டோ இசட் போர்ஸ் போன்ற மற்ற பிற தலைமை ஸ்மார்ட்போன்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு

முடிவு

ஹூவாய் பி 10 கருவியின் மதிப்பெண் வைத்து செயல்திறன் அடிப்படையில் அது மட்டுமே சிறந்த கருவியென முடிவுக்கு வந்துவிட முடியாது. ஏனெனில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ், எச்டிசி 10 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற கருவிகளின் திறனாய்வு முடிவுகளில் அனைத்துமே 89 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளன. என்று போதிலும், பி 10 கருவியானது அதன் முந்தைய வெளியீடான பி9 கருவியுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

4கே பதிவு

4கே பதிவு

ஹூவாய் பி10 கேமராவானது லெயிகா லென்ஸ்கள் பெற்றிருப்பதோடு 60எப்பிஎஸ் (FPS) வேகத்தில் முழு எச்டி 1080பி பதிவு மற்றும் 30 எப்பிஎஸ் வேகத்தில் 4கே பதிவுகளை நிகழ்த்தும் தலைமை அம்சங்கள் கொண்டுள்ளது.

போட்டு உடைக்கிறது

போட்டு உடைக்கிறது

ஆகமொத்தம் சமீபத்தில் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் வெளியான ஹூவாய் பி10 ஆனது ஐபோன் 7 கருவியை விட கேமரா அம்சங்கள் சார்ந்த அடிப்படையில் சிறந்து விளங்குகிறது என்பதை போட்டு உடைக்கிறது - டெக்ஸ்ஓமார்க் முடிவுகள்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 3310 கருவியிடம் "பல்பு" வாங்கிய கேலக்ஸி எஸ்7.!

Best Mobiles in India

English summary
This phone Just Beat The iPhone 7 Plus In Terms Of Superior Camera Quality. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X