வெறும் ரூ.5,553/-க்கு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்.!

அற்புதமான அம்சங்களை கொண்டு மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள கருவிதான் ஸியோக்ஸ் அஸ்ட்ரா மெட்டல் 4ஜி.!

Written By:

4ஜி ஸ்மார்ட்போனின் சந்தை வளர்ச்சிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டே மிகப்பெரிய ஆதாரம். அதுமட்டுமின்றி ஒரு பரவலான வகைகளில் 4ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களையும் நாம் தொடர்ச்சியாக காண்கிறோம். அப்படியாக கடந்த 2016-அம அண்டை போலவே தான் 2017-ஆம் ஆண்டும் எந்த விதிவிலக்கும் இல்லாது 4ஜி பலவகையான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

அவ்வாறாக அற்புதமானஅம்சங்களை கொண்டு மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள கருவிதான் ஸியோக்ஸ் அஸ்ட்ரா மெட்டல் 4ஜி. இக்கருவியின் விலை மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரமான தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வண்ணம்

சிறப்பான அம்சங்களை கொண்ட இக்கருவி தான் நிறுவனத்தின் முதல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும் உடன் இக்கருவி ரோஸ் கோல்ட், வெள்ளி, மற்றும் கேம்பைன் கோல்ட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

மெமரி

குறிப்புகள் அடிப்படையில், இந்த ஸியோக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5 அங்குல டிஸ்ப்ளே கொண்ட கருவியாகும். 8 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இக்கருவி மைக்ரோஎஸ்டிஅட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய ஆதரவை வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு

ஒரு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படும் இந்த் 4ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் (பெட்டிக்கு வெளியே) மற்றும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு ஆகியவைகளும் உள்ளடக்கியுள்ளது.

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் ஸியோக்ஸ் அஸ்ட்ரா மெட்டல் 4ஜி கருவியானது ஆட்டோ-போகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 5எம்பி பின்பக்க கேமிரா மற்றும் செல்பீக்களுக்கான 2எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

அம்சங்கள் தவிர்த்து இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 21 மொழிகளை ஆதரிக்கிறது. இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பிபோர்ட் ஆகியவைகளை இக்கருவி வழங்குகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
This 4G VoLTE Smartphone With a 3000mAh Battery Launched in India at Rs. 5,553. Read more about more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்