கூகுள் பிக்ஸல் போன், ஆறு சுவாரஸ்ய தகவல்கள்!

கூகுள் நிறுவனத்தின் புதுவரவு கருவியான பிக்ஸல் போன் குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

Written By:

உலக தொழில்நுட்ப சந்தையில் கூகுள் நிறுவனத்தின் புதிய அறிமுகமாக பிக்ஸல் ஸ்மார்ட்போன்கள் அமைந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 கருவிக்குப் போட்டியாக இந்தக் கருவிகள் அமைந்துள்ளன.

கூகுள் நிறுவனம் அறிவித்ததோ இல்லையோ, ஆனால் மற்ற நிறுவனங்கள் உட்பட ஆண்ட்ராய்டு பிரியர்கள் வரை எல்லோரும் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியென்றால் அது கூகுள் பிக்ஸல் மட்டும் தான் என்கின்றனர்.

இப்போட்டி அந்நிறுவனங்களின் விற்பனைக்குச் சாதகமாகவே இருக்கும். ஏற்கனவே ஐபோன் 7 குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகிவிட்ட நிலையில் புதுவரவான பிக்ஸல் கருவிகள் குறித்து பலரும் அறிந்திராத, கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூகுளின் முதல் போன்

கூகுள் நிறுவனம் வடிவமைத்து, தயாரித்த முதல் போன் கூகுள் பிக்ஸல் போன் ஆகும். கூகுள் நிறுவனமே ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்குவதால் பலருக்கும் இதில் குழப்பம் இருக்கக் கூடும். ஆப்பிள் நிறுவனத்தைப் போல், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் இயங்கும் மிகச் சிறந்த ஃபிளாக்ஷிப் போன்களை உருவாக்கும் நோக்கில் கூகுள் வெளியிட்டுள்ள கருவிகள் தான் கூகுள் பிக்ஸல்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு முதல் ஹெட்போன் ஜாக் ஆப்ஷனினை நீக்கிவிட்டு பயனர்களுக்கு வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆப்பிள் இயர்பாட்ஸ் வாங்க வேண்டும். ஆனால் கூகுள் நிறுவனம் வழக்கமான 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் உலகில் கிடைக்கும் எவ்வித 3.5 எம்எம் ஹெட்போன்களிலும் இசையை பிக்ஸல் போனில் அனுபவிக்க முடியும்.

கூகுள் அசிஸ்டண்ட்

கூகுள் பிக்ஸல் கருவிகளில் தான் முதன் முதலில் கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் அம்சமானது குரல் மூலம் இயக்கக்கூடிய தேடு பொறி சேவை ஆகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்து வேலை செய்கின்றது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆப்ஷன் ஆனது அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் வழங்கப்பட்டு வந்ததைப் போன்ற அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரவேற்பு

தற்சமயம் வரை கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் கருவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும். இணையம் முழுக்க பயனர்கள் நல்ல விமர்சனங்களை வழங்கி வரும் வேலையில் தொழில்நுட்ப சந்தையிலும் இந்தக் கருவி நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ்

கூகுள் பிக்ஸல் போன்களைப் பொருத்த வரை மெமரி குறித்து பயனர்கள் கவலை கொள்ள தேவையிருக்காது. கூகுள் நிறுவனம் பிக்ஸல் போன்களுடன் அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது தரவுகளை கிளவுடில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட குறைந்த ரெசல்யூஷனில் பதிவு செய்யப்படும். இவற்றைப் பெரிய திரையில் பார்க்கும் போது புகைப்படங்கள் தரம் குறைவாக காணப்படும். கூகுள் பிக்ஸல் போன்களில் இவ்வாறு இல்லாமல் படமாக்கப்படும் அதே துல்லியத்துடன் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அன்-லிமிட்டெட் கிளவுட் மூலம் அதிக தரத்தில் சேமித்துக் கொள்ள முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்டர் ரெசிஸ்டண்ட்

மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வரும் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆப்ஷன் கூகுள் பிக்ஸல் போன்களில் வழங்கப்படவில்லை. இதனால் கருவியினை பாதுகாக்க வேண்டும். ஒரு வேலைக் கருவியை நீரில் போட்டு விளையாட வேண்டுமெனில் மற்ற கருவிகளில் இதனை முயற்சிக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Things Regular People Need To Know About Google Pixel Phone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்