இன்றே முயற்சிக்க வேண்டிய ஆண்ட்ராய்டு தந்திரங்கள்..!

By Meganathan
|

ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பயன்படுத்த எளிமையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக பிரபலமாக இருக்கும் இந்த இயங்குதளத்தில் அனைவரும் முயற்சிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு பயனர்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய சில பயனுள்ள ஆண்ட்ராய்டு தந்திரங்களை பாருங்கள்..

பேட்டரி ஆப்டிமைசேஷன்

பேட்டரி ஆப்டிமைசேஷன்

மிகவும் எளிமையாக செய்ய கூடிய இந்த அம்சம் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு கருவியின் பேட்டரியை சேமிக்க முடியும். முதலில் போனின் ஆம்பியன்ட் டிஸ்ப்ளே மற்றும் அடாப்டிவ் ப்ரைட்னஸ் போன்ற ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.

கூகுள் நௌ

கூகுள் நௌ

முடிந்த வரை கூகுள் நௌ பயன்படுத்தலாம், இதன் மூலம் குறிப்புகளை எடுப்பது, ரிமைன்டர் மற்றும் செயலிகளை இயக்குவது போன்ற அம்சங்களை மேற்கொள்ள முடியும்.

டிவைஸ் மேனேஜர்

டிவைஸ் மேனேஜர்

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் மூலம் உங்களது கருவியை பாதுகாக்க முடியும். இந்த சேவையை ஆன் செய்து வைத்தால் போதும் போன் தொலைந்து போகும் போது கூகுள் உதவியோடு அதனினை கண்டறிய முடியும்.

வை-பை

வை-பை

கூகுள் க்ரோம் பயன்படுத்தி டேட்டாவை அதிகபட்சம் 30 சதவீதம் வரை குறைக்க முடியும், இதை மேற்கொள்ள கூகுள் க்ரோம் -- செட்டிங்ஸ் -- டேட்டா சேவர் ஆப்ஷன் சென்று ஆன் செய்ய வேண்டும்.

புஷ்புல்லட்

புஷ்புல்லட்

புஷ்புல்லட் செயலி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இதை கொண்டு மொபைலில் இருந்து டேப்ளெட் கருவிக்கு லின்க்களை அனுப்ப முடியும், இதே போன்று கணினியில் இருந்து போனுக்கும் அனுப்ப முடியும். மேலும் புஷ்புல்லட் மூலம் எஸ்எம்எஸ், அழைப்புகள் சார்ந்த நோட்டிபிகேஷன்களையும் பெற முடியும்.

என்எப்சி

என்எப்சி

இந்த சேவையின் மூலம் ப்ளூடூத் ஹெட்போன்களை போனுடன் இணைப்பது, தகவல்களை புதிய கருவியுடன் பகிர்ந்து கொள்வது ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும்.

லாக் ஸ்கிரீன் செக்யூரிட்டி

லாக் ஸ்கிரீன் செக்யூரிட்டி

இது அனைவரும் பயன்படுத்த கூடிய ஒன்று தான் இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக போனில் வித்தியாசமான லாக் ஸ்கிரீன் செயலிகளை பயன்படுத்துவது நல்லது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are things every Android owner should try. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X