திருடவே முடியாத ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து இந்திய நிறுவனம் அதிரடி.!!

By Meganathan
|

பெங்களூரை சேர்ந்த க்ரியோ எனும் தொழில்நுட்ப நிறுவனம் தனியுரிம ஸ்டாக் ஆண்ட்ராய்டு சார்ந்த FUEL எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதோடு அந்நிறுவனத்தின் க்ரியோ மார்க் 1 எனும் ஸ்மார்ட்போன் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியானது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக ரூ.19,999 விற்பனை செய்யப்படுகின்றன.

'ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் சார்ந்த கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க நீண்ட காலமாக உழைத்து வருகின்றோம். இந்த உழைப்பின் வெற்றியாக எங்களது ஸ்மார்ட்போனுடன் புதிய இயங்குதளமான ஃபூயல் கிடைடைத்துள்ளது.

இந்த இயங்குதளம் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதோடு சிறப்பான செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை வழங்கும்', என அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ சாய் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

திரை

திரை

மார்க் 1 கருவியில் முழுமையான மெட்டல் பாடி மற்றும் 5.5 இன்ச் திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் இரு பக்கமும் 2.5டி வளைவுகளும் இருக்கின்றது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 21 எம்பி சோனி IMX 230 எக்ஸ்மர் ப்ரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லோ-மோ

ஸ்லோ-மோ

இந்த கேமரா மூலம் 120 FPS தொழில்நுட்பத்தில் அல்ட்ரா ஸ்லோ-மோ மிகவும் குறைந்த வேகத்தில் வீடியோக்களை ஃபுல் எச்டி தரத்தில் பதிவு செய்ய முடியும். மேலும் இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் பில்ட் இன் கேமரா ஆப் மூலம் 3டி புகைப்படங்களை பதிவு செய்ய முடியும்.

பிராசஸர்

பிராசஸர்

இதோடு 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டா கோர் ஹீலியோ X10 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி திறன் கொண்ட இந்த கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

சென்ஸ்

சென்ஸ்

மார்க் 1 கருவியில் சென்ஸ் ஆப்ஷன் மூலம் ஹோம் பட்டனை இரு முறை டேப் செய்தால் போனின் செட்டிங்ஸ், செயலிகள், குறுந்தகவல், காண்டாக்ட், புகைப்படம், ஃபைல்கள், காலென்டர் என அனைத்து சேவைகளில் இருந்தும் தேடல்களை மேற்கொள்ள முடியும்.

எக்கோ

எக்கோ

நீங்கள் முக்கியமான அலுவல்களில் ஈடுப்பட்டிருக்கும் போது உங்களது அழைப்புகளை எக்கோ ஏற்று கொள்ளும். அழைப்புகளை ஏற்கும் தகவல்களை போனில் செட் செய்தால் மறுமுனையில் அழைப்பவர்கள் தெரிவிக்கும் தகவல்களை சேமித்து வைத்து கொள்ளும். இதற்கு இண்டர்நெட் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவை தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிட்ரீவர்

ரிட்ரீவர்

இந்த அம்சம் கருவியை உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கின்றது. இதன் மூலம் க்ரியோ மார்க் 1 கருவியில் புதிய சிம் கார்டு நுழைத்தால் அதனினை மின்னஞ்சலில் தெரிவித்து விடும். இந்த சேவைக்கு இண்டர்நெட் தேவையில்லை என்பதோடு கருவியை ஃபேக்ட்ரி ரீசெட் செய்தாலும் இந்த ஆப்ஷன் வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் ரோமிங்

ஸ்மார்ட் ரோமிங்

அதிகளவில் பயணம் செய்வோருக்கு வசதியாக ஸ்மார்ட் ரோமிங் அம்சம் விளங்குகின்றது. இதனால் சொந்த ஊரில் பயன்படுத்தும் சிம் கார்டு தானாக சிம் 1 இல் பதிவு செய்யப்பட்டு விடுகின்றது. மற்றொரு சிம் கார்டு ரோமிங் சேவைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஸ்மார்ட் ஃபார்வேர்டிங்

ஸ்மார்ட் ஃபார்வேர்டிங்

கருவியின் இரு சிம்களில் ஏதேனும் ஒன்றில் நெட்வர்க் இல்லாத போது இந்த அம்சம் சிம் 1 அழைப்புகளை தானாக சிம் 2 விற்கும், இதே போல் சிம் 2 வில் இருந்து சிம் 1க்கும் அழைப்புகளை தானாக டைவர்ட் செய்து விடும்.

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் SMS இன்பாக்ஸ் ஸ்பேம் குறுந்தகவல்களை தானாக கண்டறிந்து விடும்.

ஆன் டிமான்ட் சர்வீஸ்

ஆன் டிமான்ட் சர்வீஸ்

சென்ஸ் ஆப்ஷனில் க்ரியோ சப்போர்ட் என டைப் செய்து க்ரியோ நிறுவனத்தின் உதவி மையத்திற்கு நேரடியாக அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்ப முடியும்.

வீடியோ

இந்த கருவியின் விளக்க வீடியோ.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேஷ வசதியுடன் ஸ்மார்ட்போன்.!!

மொபைலில் அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீட்பது எப்படி.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
theft proof Indian smartphone with unique features Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X