Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சாம்சங் களமிறக்கும் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்!

Updated: Wednesday, July 4, 2012, 10:48 [IST]

the rs 30k samsung galaxy beam projector phone to hit india soon

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சந்தையில் முன்னனியில் இருந்து வரும் சாம்சங் ஒரு புதிய புரொஜெக்டர் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய ப்ரொஜெக்டர் ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் கேலக்ஸி பீம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த புதிய கேலக்ஸி பீம் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த பீமில் உள்ள 15 லூமன்ஸ் ப்ரொஜெக்டர், மல்டி மீடியா கண்டென்டுகளை சுவர்கள் அல்லது திரைகளில் பெரியதாக மற்றும் மிகத் தெளிவாகக் காட்ட உதவுகிறது.

4.4 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது விரைவாக செயல்படும். மேலும் இந்த பீம் ப்ரொஜெக்டர் ஸ்மார்ட்போன் 5 எம்பி ஆட்டோ போக்கஸ் கொண்ட பின்பக்க கேமராவையும் மற்றும் 1.3 எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி வரை விரிவு செய்யக் கூடிய 8ஜிபி மெமரியை பெறலாம். அதோடு 2000எம்எச் பேட்டரியும் இதில் உள்ளதால் இதன் இயங்கு நேரமும் அதிகமாக இருக்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போன் 768எம்பி ரேமையும் கொண்டிருக்கிறது.

இதில் ப்ரொஜெக்டர் வசதி உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மல்டி மீடியா பைல்களை குறிப்பாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பெரிய திரைகளில் பார்த்து மகிழலாம். இதன் விலை பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.

Story first published:  Wednesday, July 4, 2012, 10:48 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll