மொபைலின் முழு வரலாறு இதுதான்...!

By Keerthi
|

இன்றைக்கு மொபைல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனைவரும் லேன்ட்லைன் போனில் ஹலோ ஹலோனு கத்திக் கொண்டு இருந்திருப்போம்.

மேலும் லேன்ட்லைன் போனின் பில்லை பார்த்து மயக்கம் அடைந்தவர்கள் ஏராளம் உண்டு தமிழ்நாட்டில்.

அவையனைத்தையும் இன்று உடைத்து லேன்ட்லைன் என்றால் என்ன என்று கேட்கப் போகும் தலைமுறை வர இன்னும் தூரமில்லை எனலாம் இதற்கு முதற்காரணம் மொபைல் தான்.

இன்று ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது

#2

#2

ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

#3

#3

காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

#4

#4

பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

#5

#5

மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

#6

#6

ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

#7

#7

டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

#8

#8

விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

#9

#9

மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

#10

#10

2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

#11

#11

அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

#12

#12

மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

#13

#13

மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

#14

#14

எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

#15

#15

இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

#16

#16

வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

#17

#17

டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது

#18

#18

மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

#19

#19

மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

#20

#20

ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

#21

#21

டச் ஸ்கிரின் மொபைல் வந்து கலக்கியது

#22

#22

ஆண்ட்ராய்டு மொபைல் உலகை தனதாக்கியது.

#23

#23

எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு மொபைல் தயாரிக்கப்பட்டு வருகிறது...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X