நோக்கியா 3310, ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் (கான்செப்ட் வீடியோ).!

நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தெடர்ந்து நோக்கியாவின் அடுத்த அதிரடி திகைப்பு - கான்செப்ட் வடிவமாக.!!

|

இந்த 2017-ஆம் ஆண்டு நோக்கியாவின் சாம்பிராஜ்யம் என்று வரலாற்றில் கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருகாலத்தில் "கிங் ஆப் மொபைல் மார்க்கெட்" ஆக திகழ்ந்த நோக்கியா நிறுவனம் சரிந்து, அதன் பிராண்ட் பெயரை தவிர மக்களிடம் கொடுக்க ஒன்றுமில்லாத நிறுவனமாக திண்டாடியது.

இப்போது நோக்கியா கருவிகளின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. நேற்று அடித்த மலையில் இன்று முளைத்த காளான்களாய் நோக்கியாவின் முன் அஞ்சி நிற்கின்றன புத்தம்புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.!

அதற்கு சற்றும் சளைக்காத வண்ணம் நோக்கியா நிறுவனத்தின் பிராண்ட் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டு வாடிக்கையாளர்கள் உட்பட போட்டியாக்ர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அடுத்த நோக்கியாவின் அதிரடி திகைப்பு - கான்செப்ட் வடிவமாக.!!

மறு அறிமுகம்

மறு அறிமுகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே கிளாசிக் நோக்கியா 3310 கருவிதான் தொழில்நுட்ப தலைப்பு செய்தியாக உலா வருகிறது. அதாவது இம்மாத இறுதியில், பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் நடக்கும் நடைபெறும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் நோக்கியா 3310 கருவி மறு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

ஏற்கனவே வெளியான அறிக்கைகளின்படி இந்த நவீன நோக்கியா 3310 இம்மாத இறுதிக்கு பின்னர் தொடங்கப்பட வேண்டும் கூறப்படுகிறது. மற்றும் கருவியில் சில மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் நிகழ்த்தப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

குறிப்பாக நோக்கியா 3310 கருவியில் வழக்கமான ஒரு நீண்ட கால பேட்டரி ஆயுள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இக்கருவியின் விலை ரூ.4,000/- என்ற நிர்ணயத்தை பெறலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரபலமற்ற சேனல் மூலம்

பிரபலமற்ற சேனல் மூலம்

இதற்கிடையில், ஒரு புதிய நோக்கியா 3310 கருவி சார்ந்த கருத்து வீடியோ பிரபலமற்ற சேனல் (கான்செப்ட் க்ரியேட்டர்) மூலம் வெளியாகி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் கற்பனைக்கு எட்டாத வண்ணம் ஒரு நோக்கியா 3310 கான்செப்ட் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

விரிவாக இந்த கருத்து வீடியோவானது நோக்கியா 3310 ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டிருக்கும் மற்றும் கைபேசி அதே அளவில் அதே வடிவத்தை தக்கவைத்து வெளியாகும் என்றும் தெரிவிக்கிறது.

பின்புற ஸ்னேப்பர்

பின்புற ஸ்னேப்பர்

அனைத்திற்கும் மேலாக நோக்கிய 3310 கருவியின் டிஸ்ப்ளேவில் நிறங்கள் இருக்கும் என்ற கற்பனையும் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் அது ஒரு ஸ்மார்ட்போன் உணர்வை கொடுக்கும் வண்ணம் ஒரு பின்புற ஸ்னேப்பர் (கேமரா) கொண்டிருப்பதாகவும் கான்செப்ட் விளக்குகிறது.

விண்டோஸ் போன் பிளாட்பார்ம்

விண்டோஸ் போன் பிளாட்பார்ம்

இந்த் சமீபத்திய கருத்து வீடியோ ஒருபக்கம் இருக்க, சற்று பழைய கர்வுடுலேப்ஸ் நோக்கியா 3310 கான்செப்ட் ஆனது இக்கருவி நோக்கியா லூமியா போன்கள் போன்ற விண்டோஸ் போன் பிளாட்பார்ம் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

அழிக்கமுடியாத ஒரு கருவி

அழிக்கமுடியாத ஒரு கருவி

இப்போது வரை வரவிருக்கும் நோக்கியா 3310 எப்படி இருக்கும் என்ற எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் கிடையாது. இந்த தொலைபேசியானது எச்எம்டி க்ளோபல் நிறுவனம் மூலம் மீண்டும் வெளியிடப்பட வேண்டுமென்ற யோசனை அழகான மற்றும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கும், உடன் நிச்சயமாக நோக்கியா 3310 அழிக்கமுடியாத ஒரு கருவி என்பதிலும் சந்தேகமே இல்லை.!

வீடியோ

வெளியான 3310 ஆண்ட்ராய்டு ஓஎஸ் கான்செப்ட் வீடியோ.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

மெய்சிலிர்க்க வைக்கும் நோக்கியா 8 கான்செப்ட் (விடியோவுடன்).!

Best Mobiles in India

English summary
Nokia 3310 running Android imagined in this concept video. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X