4ஜி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ - ரூ.3,799/-க்கு வேறென்ன வேணும்.?

இதுக்கு மேல வேறென்ன வேணும்.!? இதுவே போதும்.!!

Written By:
"ஒரு நாலாயிரத்துக்குள்ள நல்ல ஸ்மார்ட் போன் இருந்தா சொல்லுங்களேன்..?" என்ற கேள்வியை நீங்கள் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. நான்காயிரம் மட்டும்மல்ல.. ஐந்தாயிரம்.. ஆறாயிரம்.. ஏழாயிரம்.. என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்ஜெட், ஒவ்வொரு தேவை.!

எல்லா நேரத்திலும் எல்லோரது ஸ்மார்ட்போன் அம்சங்கள் சார்ந்த எதிர்பார்ப்பும் பூர்த்தி அடைவதில்லை. ஒருவேளை உங்களின் பட்ஜெட் ரூ.4,000/- ஆக இருந்தால் உங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் இந்த "ஸ்டார்" கருவி பூர்த்தி செய்து வைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிரத்தியேகமாக

ஸ்வைப் டெக்னாலஜிஸ் ரூ.3,799/-க்கு அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆன ஸ்வைப் கனெக்ட் ஸ்டார் கருவியை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளி, கோல்டன் மற்றும் சாம்பல் நிறம் விருப்பங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ஷாப்க்ளூஸ் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

டிஸ்ப்ளே, செயலி

கருவியின் அம்சங்களை பட்டியலிட்டால், ஸ்வைப் கனெக்ட் ஸ்டார் ஒரு 4 அங்குல டிஸ்ப்ளே மற்றும் 1ஜிபி ரேம் ஜோடியாக ஒரு 1 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இந்த கருவி 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வருகிறது.

கேமரா

ஸ்மார்ட்போனின் கேமரா துறையை பொறுத்தமட்டில் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 1.3-மெகாபிக்சல் முன்பக்க கேமரா இணைந்து எல்இடி ப்ளாஷ், ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது.

பேட்டரி

உடன் இந்த சாதனம் ஒரு 1800எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பெற்றுள்ளது மற்றும் 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் எப்எம் ரேடோயோ ஆகிய இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது.

விற்பனை

இக்கருவியை வாங்க விரும்பும் பயனர் தற்போது ஷாப்க்ளூஸ் வலைதளத்தில் முன்பதிவை நிகழ்த்திக்கொள்ளலாம் நாளை (பிப்ரவரி 16) இக்கருவி சார்ந்த விற்பனை இ-காமர்ஸ் தளத்தில் நிகழும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Swipe Konnect Star launched with 4G VoLTE and Android Marshmallow at Rs 3799. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்