ஸ்பைஸ் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ.4,399 தான், நீங்க வாங்கிட்டீங்களா

By Meganathan
|

ஸ்பைஸ் நிறுவனம் இந்தியாவில் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூபாய் 4,399 என நிர்னயக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போது கிடைக்கும் என்பது மர்மமாகவே உள்ளது.

ஸ்பைஸ் புதிய ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் விலை ரூ.4,399 தாங்க

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 256 எம்பி ராம் கொண்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை 2 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் வசதியும் உள்ளது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ஜிபிஆர்எஸ்/எட்ஜ், வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதிகளோடு 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இந்நிறுவனம் சமீபத்தில் ஸ்டெல்லார் 517 மற்றும் ஸ்டெல்லார் 470 ஸ்மார்ட்போன்களை ரூ.7,999 க்கு வெளியிட்டதோடு இரண்டும் டூயல்சிம் மற்ரும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Spice launched Android KitKat-based smartphone at Rs.4,399. check out the specifications and price tag of the new smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X