உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட வசதிகள் அனைவராலும் விரும்பப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை சரிவர நிறைவேற்ற வரும் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா வரிசையில் இன்னொரு புதிய ஆக்ரோ ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சோனி ஹயதே என்ற பெயரையும் கொண்டுள்ளது. இது 4.3 இஞ்ச் திரை வசதியை வழங்கும்.
எக்ஸ்பீரியா ஆர்கோ ஸ்மார்ட்போனில் உள்ள ஆன்ட்ராய்டு வி2.3.7 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் எந்தவித தடையும் இன்றி இயங்க இதன் பிராசஸர் சிறப்பாக உதவும். இந்த திரை வசதியின் மூலம் சிறந்த துல்லியத்துடன் எந்த தகவல்களையும் பார்க்க முடியும். ஏனெனில் இதில் உள்ள திரை 720 X 1280 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.
அனைவரையும் அசத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக 12 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். புகைப்படமோ, வீடியோவோ எதுவாக இருப்பினும் இந்த எக்ஸ்பீரிய ஆக்ரோ ஸ்மார்ட்போன் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தரும்.
அதிக பிக்ஸல் கொண்ட கேமராவினை வழங்குவது போல இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் உழைக்கும் 1,840 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எக்ஸ்பீரியா ஆக்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரும் உள்ளது.
அனைத்து வகையிலும் அதிக வசதிகளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கிறது.















