வைரலாகும் சோனாக்ஷியின் ஏசஸ் வீடியோ.!!

Written By:

வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஏசஸ், இந்தியாவிற்கான விளம்பர தூதராக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நியமித்துள்ளது. தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமானது இதற்கான முறையான அறிவிப்பை மே மாதம் 23 ஆம் தேதி வழங்கியது. இதே நாளில் அந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான சென்ஃபோன் மேக்ஸ் (2016 பதிப்பு) அறிமுகம் செய்தது.

அறிமுகம் செய்யப்பட்ட ஏசஸ் சென்ஃபோன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கருவியை சோனாக்ஷி பயன்படுத்தும் விளம்பர வீடியோ ஒன்றையும் ஏசஸ் நிறுவனம் வெளியிட்டது. சோனாக்ஷி பயன்படுத்தி, நடித்த ஏசஸ் கருவியின் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

புதிய ஏசஸ் சென்ஃபோன் மேக்ஸ் கருவியில் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 3 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்றும் ஸ்டான்ட்பை மோடில் 38 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

இதோடு இந்த போனினை பவர் பேங்க் போன்றும் பயன்படுத்த முடியும். இதை கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போன் கருவியை சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

5.5 இன்ச் 720 பிக்சல் திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

4

ஏசஸ் சென்ஃபோன் மேக்ஸ் கருவியானது 2ஜிபி மற்றும் 3ஜிபி என இரு மாடல்களில் கிடைக்கின்றது. இவை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.12,999க்கும் கிடைக்கின்றது.

5

கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் ஆரஞ்சு மற்றும் நீலம் என புதிதாக இரு நிறங்களில் கிடைக்கின்றது. இதனினை உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.
சோனாக்ஷி நடித்த விளம்பர வீடியோ ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Sonakshi Sinha's New Asus Zenfone Max Ad is going viral and it will make you buy
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்