ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துள்ளது...

Written By:

ஸ்மார்ட்போன் சந்தை பல நிறுவனங்களின் அட்டகாசமான கருவிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் விலை குறைப்பு மிகவும் சாதாரணமாகவே பார்க்கப்படுகின்றது. தினமும் பல கருவிகளின் விலை குறைக்கப்பட முக்கிய காரணம் புதிய கருவிகளின் வெளியீடுகள் என்பதே உண்மை.

அந்த வகையில் சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சியோமி ரெட்மி 2

இந்தியாவில் சியோமி நிறுவனம் ரெட்மி 2 கருவியின் விலையை ரூ.1000 வரை குறைத்திருக்கின்றது, அதன்படி அதன் புதிய விலை ரூ.5,999க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி (ஜென் 2)

மோட்டோரோலாவின் அதிகம் விற்பனையான இந்த கருவியின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கின்றது.

கூகுள் நெக்சஸ் 6

கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் 6 கருவி சந்தையில் ரூ.44,399க்கு வெளியானது, ஆனால் தற்சமயம் ரூ.34,999க்கும் 64ஜிபி மாடல் கருவியை ரூ.39,999க்கும் வாங்க முடியும். முன்னதாக 64 ஜிபி நெக்சஸ் 6 ரூ.49,999க்கு விற்பனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

சியோமி ரெட்மி நோட் 4ஜி

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4ஜி கருவியின் விலையை ரூ.2000 வரை குறைத்திருக்கின்றது. தற்சமயம் இந்த கருவி அமேசான் தளத்தில் ரூ.7,999க்கு கிடைக்கின்றது.

ஒப்போ ஃபைன்டு 5 மினி

துவக்கத்தில் ரூ.14,990க்கு வெளியான இந்த கருவி தற்சமயம் ரூ.9,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஹூவாய் ஹானர் 6

ஹூவாய் நிறுவனம் ஹானர் 6 கருவியின் விலையை ரூ.2000 வரை தள்ளுபடி செய்திருப்பது அந்த கருவி.ின் விலையை ரூ.17,999க்கு கொண்டு வந்திருக்கின்றது.

ஒப்போ நியோ 3

ஒப்போ நியோ 3 ரூ.8,990க்கு வெளியாகி தற்சமயம் ரூ.7,590க்கு கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

 

Read more about:
English summary
Following are a list of best smartphones that got price cuts recently. This is interesting and you will like this..
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்