10,000எம்ஏஎச் பேட்டரி ஆனால் வெறும் 3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.!

10,000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது என்று கூறினாலே மிகவும் அற்புதமான ஒரு சிறப்பம்சமாக கருதும் நிலைப்பாட்டில்...

|

வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் இது எங்கள் நிறுவனத்தின் சக ஊழியர்களுக்கு மிகவும் தேவை. ஆம் எங்களின் தொலைபேசி பேட்டரி சில மணிநேரங்களுக்குள் இறந்துவிடுவதால் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் எளிமையாக தொடர்பு கொண்டு அடைய முடியவில்லை. ஆனால், இப்போது நாங்கள் அதற்கான ஒரு சரியான தீர்வை - இந்த அற்புதமாக ஸ்மார்ட்போன் மூலம் - கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

ஒரு ஸ்மார்ட்போன் 10,000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது என்று கூறினாலே மிகவும் அற்புதமான ஒரு சிறப்பம்சமாக கருதும் நிலைப்பாட்டில் அந்த 10,000 எம்ஏஎச் பேட்டரி வெறும் 3 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிடும் என்று கூறினால் நம்புவீர்களா.?

ஜூன் மாதத்தில்

ஜூன் மாதத்தில்

ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். சீன தொலைபேசி தயாரிப்பாளரான ஒக்கிடெல் நிறுவனம், அதன் புதிய தொலைபேசியான கே10000 ப்ரோ ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிடுகிறது.

10-15 நாட்கள் வரை

10-15 நாட்கள் வரை

இந்த கருவியின் பேட்டரி சுமார் 10-15 நாட்கள் வரை எளிதாக நீடிக்கும் வகையிலான 10,000 எம்ஏஎச் திறன் கொண்டுள்ளது என்பது தான் இந்த ஸ்மார்ட்போனின் ஆகச்சிறந்த அம்சமாகும். கே10000 ப்ரோ அக்கருவியானது அதன் முன்னோடியான கே10000 தொடர்ந்து வெளியாகும் கருவியாகும்.

மீதம் 10 சதவிகித பேட்டரி

மீதம் 10 சதவிகித பேட்டரி

இந்த ப்ரோ தொலைபேசியானது, 3 மணி நேரத்தில் பேட்டரியை நிரப்ப வல்ல 12வி / 2ஏ ப்ளாஷ் சார்ஜருடன் வருகிறது. ஒக்கிடெல் கே10000 தான் உலகின் மிகப்பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் முழுமையாக சார்ஜுக்கு மூன்று ஐபோன் 6 பிளஸ் அலகுகளை சார்ஜ் செய்தால் கூட மீதம் 10 சதவிகித பேட்டரி ஆயுள் மிச்சமிருக்கும்.

ஒப்பீட்டில்

ஒப்பீட்டில்

இதர நிறுவனங்கள் என்னதான் அம்சங்களை திணித்தாலும் இதன் அபாரமான பேட்டரி திறனுக்கு சமமாகாது. ஒப்பீட்டில் ஆசஸ் சென்போன் மேக்ஸ் ஆனது 5,000எம்ஏஎச் திறனும், சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் 3,500எம்ஏஎச் திறனும், பிக்சல் எக்ஸ்எல் 3,450எம்ஏஎச் திறனும் கொண்டுள்ளது.

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

பேட்டரியை தவிர்த்து இக்கருவியின் அம்சங்கள் என்னென்னவென்று பார்த்தால், இது ஒரு 5.5 அங்குல 1080பி டிஸ்பிளே, மீடியா டெக் ஆக்டா-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது மற்றும் அளவீட்டில் 292.5 கிராம் எடை கொண்டிருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Oukitel’s K10000 Pro: Smartphone with massive 10,000mAh battery that charges in 3 hours. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X