பேட்டரி கட்டுக்கதைகள் : இதெல்லாம் நம்ப, நான் என்ன முட்டாளா.?

ஸ்மார்ட்போன் பேட்டரி குறித்த கட்டுக்கதைகளில் ஒருசிலவற்றை பார்ப்போம்

By Siva
|

ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இனிமேல் மனிதனையும் ஸ்மார்ட்போனையும் பிரிக்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது. சாப்பாடு இல்லாமல் கூட பலர் இருந்துவிடுவார்கள், ஆனால் ஒரு நிமிடம் கூட ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது.

பேட்டரி கட்டுக்கதைகள் : இதெல்லாம் நம்ப, நான் என்ன முட்டாளா.?

அதே நேரத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்னர் அது எந்த கம்பெனியின் போனாக இருந்தாலும், என்ன விலையாக இருந்தாலும், எத்தனையோ சிறப்பு அம்சங்கள் இருந்தபோதிலும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி இந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும் என்பதுதான்

ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன், அடுத்தது நோக்கியா பி1 தான்.?

சார்ஜ் நிற்கும் திறனை அறியாமல் வாங்கிவிட்டு பின்னர் அவஸ்தைப்படுவோர் பலர் உள்ளனர். ஒருசிலர் சார்ஜ் திறனை மேம்படுத்த ஒருசில ஆப்ஸ்களை பயன்படுத்துவார்கள், இன்னும் சிலர் இணையதளத்திற்கு சென்று பேட்டரியை பாதுகாப்பது எப்படி? என்று தேடுவார்கள்.

முன்பு 1ஜிபி என்றால் இப்போது 4ஜிபி : இது வோடபோன் 4எக்ஸ் அதிரடி.!
இண்டர்நெட்டில் கோடிக்கணக்கான தகவல்கள் கொட்டி கிடந்தாலும் , அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நம்பிவிட முடியாது. ஸ்மார்ட்போன் பேட்டரி குறித்து பலவிதமான கட்டுக்கதைகள் இண்டர்நெட்டில் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் பயனாளிகளிடம் இருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான கட்டுக்கதைகளில் ஒருசிலவற்றை பார்ப்போம்

இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டாம் என்பது உண்மையா?

இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டாம் என்பது உண்மையா?

இரவில் ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லாவிட்டால் தூங்குவதற்கு முன் சார்ஜில் போட்டுவிட்டு பின்னர் காலையில் சார்ஜரை எடுத்து விடும் பழக்கம் பலருக்கு உண்டு. இது தவறாக வழிமுறை என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்

ஸ்மார்ட்போன் பேட்டரியில் உள்ள லித்தியம் அயான் என்பது நீண்ட நேரம் சார்ஜில் இருந்தால் வெப்பம் அதிகமாகி சிலசமயம் வெடிக்கும் அபாயமும் உண்டு. அல்லது ஸ்போனில் உள்ள முக்கிய பகுதிகளை டேமேஜ் ஆக்கிவிடுவதும் உண்டு என்பது ஒருகாலத்தில் உண்மை.

ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் எந்த அளவுக்கு தரம் உயர்ந்து காணப்படுகிறதோ, அதேபோல் ஸ்மார்ட்போனின் சார்ஜரும் தரமானதாக வருகிறது.

எனவே இரவு முழுவதும் நீங்கள் சார்ஜரை இணைத்திருந்தாலும் வெடிப்பது உள்பட எந்தவித அசம்பாவிதமும் நேரிட வழி இல்லை. மேலும் இன்றைய நவீன சார்ஜர்கள் ஒருசில நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும் என்பதால் ஏன் நீங்கள் இரவு முழுவதும் சார்ஜ் ஏற்ற வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது.

100% பேட்டரியை சார்ஜ் செய்தே தீர வேண்டுமா?

100% பேட்டரியை சார்ஜ் செய்தே தீர வேண்டுமா?

ஆரம்ப காலத்தில் ஸ்மார்ட்போனின் பேட்டரி நிக்கல் உலோகம் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதனால் ஸ்மார்ட்போனில் எப்போதும் 100% சார்ஜ் இருக்க வேண்டும் என்றும் சார்ஜ் இல்லாமல் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டால் அதில் உள்ள முக்கிய டேட்டாகள் அழிந்துவிடும் என்றும் கூறப்பட்டது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் பேட்டரிகள் அனைத்தும் லித்தியம் அயன் உலோகத்தால் ஆவதால் உங்கள் ஸ்மார்ட்போன் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனால் அதில் உள்ள தகவல்கள் எதுவும் டேமேஜ் ஆவதில்லை. எனவே இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம்.

புளூடூத், லொகேஷனை ஆஃப் செய்துவிட்டால் பேட்டரி நீடிக்குமா?

புளூடூத், லொகேஷனை ஆஃப் செய்துவிட்டால் பேட்டரி நீடிக்குமா?

புளூடூத், வைபை, லொகேஷன் சர்வீஸ் ஆகியவற்றை ஆஃப் செய்துவிட்டால் சார்ஜ் வேகமாக இறங்காது என்பது ஒரு தகவல். இது உண்மையா? என்று கேட்டால் ஓரளவு உண்மைதான்.

ஆனால் அதே நேரத்தில் இந்த சர்வீஸ்களை பயன்படுத்துவதால் இறங்கும் சார்ஜின் விகிதம் மிக மிக குறைவு. இதனால் பேட்டரியின் சார்ஜில் பெரிய மாற்றம் ஏற்பட போவது இல்லை. எனவே சிறிதளவு சார்ஜூக்காக மேற்கண்ட சேவைகளை ஆஃப் செய்ய வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
There are quite a few myths surrounding the smartphone batteries which must have been true at one point but are not anymore. Today we will bust some common

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X