Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆகஸ்டு 30-ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி நோட்-2!

Updated: Tuesday, March 26, 2013, 11:45 [IST]

samsung to launch galaxy note 2 on august 30

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம்.

சாம்சங்கின் நோட்-2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

ஆனால் நோட்-2 ஸ்மார்ட்போனுடைய வடிவமைப்பு மற்றும் பல வசதிகள் எல்லாம் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் ரூ. 34,990 விலை கொண்டதாக இருந்தது. அதிலும் இந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ரூ. 32,990 விலையில் கிடைக்கும் என்று நமது கிஸ்பாட்டில் ஒரு செய்தியை படித்திருப்பீர்கள்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ரூ. 43,180 விலை கொண்டதாக இருந்தது. சாம்சங் நிறுவனத்தின் வலைத்தளத்தில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 42,500 விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. நிறுவனத்தின் இந்த முக்கியமான இரண்டு ஸ்மார்ட்போன்களைவிடவும், கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனின் விலை அதிகமானதாகவும் இருக்கலாம்.

அல்லது ஒருவேளை கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலையைவிடவும் குறைவாகுவும் இருக்கலாம். இதனால் ஆகஸ்டு மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் வரை இதன் விலையை பற்றி சரிவர கூற முடியாத நிலையில் உள்ளது.

Story first published:  Saturday, July 14, 2012, 14:04 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll