சிக்ஸர் அடிக்கக் காத்திருக்கும் சாம்சங், புதிய காப்புரிமை தகவல்கள்.!

சில சறுக்கல்களைச் சந்தித்து வரும் சாம்சங், சீறிப் பாயும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Written By:

சாம்சங் நிறுவன வரலாற்றில் மிக மோசமான வருடமாக இந்த ஆண்டு நிச்சயம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கேலக்ஸி நோட் 7 வெடித்து, அவற்றை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது, பின் அதே பிரச்சனை காரணமாகச் சுமார் 2.8 மில்லியன் வாஷிங் மெஷின்களைத் திரும்பப் பெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமை அந்நிறுவனத்தின் சில திட்டங்களை உலகறியச் செய்திருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன்

இரண்டாக மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் கருவியைத் தயாரிக்கும் உரிமையைக் கோரி கொரியன் காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் புதிய காப்புரிமை ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றது.

கேலக்ஸி

புதிய கருவியானது கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் இந்தக் கருவியில் சாம்சங்கின் வழக்கமான ஹோம் பட்டன் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

2017

சில காலமாக வளையும் டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வரும் சாம்சங் தனது முதல் மடிக்கும் கருவியினை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஸ்ப்ளே

புதிய கேலக்ஸி எக்ஸ் கருவியின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும் போது, டிஸ்ப்ளே 21:9 என்ற அளவில் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

முதல் நிறுவனம்

கடந்த வாரம் ஆப்பிள் புதிய காப்புரிமையும் மடிக்கும் திறன் கொண்ட கருவியை வடிவமைக்க இருப்பதை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எந்த நிறுவனம் உலகின் முதல் மடிக்கும் திறன் கொண்ட கருவியை வெளியிடும் என்ற ஆவல் இரு நிறுவன பயனர்களிடம் எழுந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Samsung said to unveil its first foldable smartphone next year
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்