இந்தியாவில் கேலக்ஸி எஸ்7, எஸ்7 எட்ஜ் : கதற வைக்கும் அம்சங்கள்.!!

Written By:

சாம்சங் ப்ரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை சாம்சங் நிறுவனம் ஒரு வழியாக நிறைவேற்றியது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போகும் விதமாக சாம்சங் நிறுவனம் இரு கருவிகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7, மற்ரும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் என இரு கருவிகளும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ், மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது.

மொபைல் ப்ரியர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த கருவியின் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.100 கோடி செலவிட சாம்சங் நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. அப்படி இந்த கருவியில் என்ன தான் இருக்கின்றது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

திரை

கேலக்ஸி எஷ்7 கருவியில் 5.1 இன்ச் மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியில் 5.5 இன்ச் திரையும் வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

3டி கிளாஸ் மற்றும் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் கைகளில் பயன்படுத்த சவுகரியாக இருக்கின்றது.

வாட்டர் ப்ரூஃப்

இரு கருவிகளும் ஐபி68 சான்று பெற்றிருப்பதால் நீர் மற்றும் மாசு மூலம் எதுவும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை மீட்டர் ஆழ நீரில் 30 நிமிடங்களுக்கு முங்கி இருந்தாலும் எதுவும் ஆகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசம்

மார்ச் 8 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரையிலான காலத்தில் முன்பதிவு செய்வோருக்கு சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா

கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவியிலும் 12 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இவை குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாஸர்

இரு கருவிகளிலும் வுல்கான் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த கிராஃபிக்ஸ் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களும் இவை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு (2.3 ஜிகாஹெர்ட்ஸ்+1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்) ஆக்டா கோர் 64-பிட் பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

இயங்குதளம்

குவாட் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி திரை கொண்டிருக்கும் இரு கருவிகளும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.

மெமரி

இரு கருவிகளிலும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரி கார்டு மூலம் சுமார் 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இத்தனை சக்தி வாய்ந்த சிறப்பம்சங்களுக்கு சிறந்த முறையில் சக்தியூட்ட கேலக்ஸி எஸ்7 கருவியில் 3000 எம்ஏஎச் பேட்டரியும், எஸ்7 எட்ஜ் கருவியில் 3600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை

இந்தியாவில் கேலக்ஸி எஸ்7 ரூ.48,900க்கும், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.56,900க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Samsung's Galaxy S7, Galaxy S7 Edge smartphones now in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்