Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் வெளியீடு!

Updated: Tuesday, March 26, 2013, 11:42 [IST]

samsung officially launches galaxy beam in india

கேலக்ஸி நோட்-II ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்த்து கொண்டிருக்கையில், கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போனை அதிகார பூர்வமாக வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இதனால் இந்த ஸ்மார்ட்போனை இந்திய மொபைல் ஸ்டோர்களிலேயே பெறலாம்.

ப்ரொஜெக்டர் என்று சொல்ல கூடிய இந்த சாம்சங் கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் அப்கிரேட் செய்யப்படுமா? என்பது பற்றி இன்னும் ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை.

4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். அழகான புகைப்படங்கள் எடுக்க இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா இருக்கவே இருக்கிறது.

அதிலும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே இதன் ப்ரொஜெக்டர் வசதி தான். இந்த ப்ரொஜெக்டர் ஒளியை செலுத்தி எந்த புகைப்படங்கள், தகவல்கள் போன்றவற்றை தெளிவாக பெரிய திரையில் பார்கக முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் இது மட்டும் அல்லாது 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் இ-ஸ்டோரில் இந்த கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் ரூ. 29, 990 விலை கொண்டது.

Story first published:  Friday, July 20, 2012, 13:55 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll