Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புதிய கேலக்ஸி டியோஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

Updated: Tuesday, March 26, 2013, 11:41 [IST]

samsung launches new galaxy series smartphone at rs 15090

ஸ்மார்ட்போன்கள் பற்றி புதிய தகவல்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

வெற்றி நடை போடும் கேலக்ஸி வரிசையில் ஏஸ் டியோஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெள்யிட்டுள்ளது சாம்சங். மெர்குரியை உருக்கி செய்தது போன்ற வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களையும் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 832 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. 3.5 இஞ்ச் அகன்ற திரை வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவில் அசர வைக்கும் பர்ஃபாமென்ஸ் கொண்டதாக இருக்கும்.

இதன் திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இந்த கேலக்ஸி டியோஸ் ஸ்மார்ட்போன் பற்றி முக்கியமாக கூற வேண்டியது, இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஏஸ் ஸ்மார்ட்போனின் அப்கிரேடு வெர்ஷன் என்று கூறலாம். 3 ஜிபி இன்டர்னல் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரமும் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி டியோஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,090 விலையினை கொண்டதாக இருக்கும்.

Story first published:  Tuesday, June 19, 2012, 15:09 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll