கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் - போல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் எப்போது வெளியாகும்.? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்.?

Written By:

இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் சாம்சங் நிறுவனம் அதன் தலைமை அக்கருவியான கேலக்ஸி எஸ்8 சாதனத்தை வெளியிடவுள்ளது என்பது நாம் அறிந்தே ஒன்றே. ஆனால் கேலக்ஸி எஸ்8 கருவியை விட அதிகமாக எதிர்பார்க்கப்படும் சாம்சங் கருவியொன்று உள்ளது - அதுதான் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அதாவது மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்.!

கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் - போல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.!

நீண்ட எதிர்பார்க்கப்படும் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் சார்ந்த வேலைகள் ஆனது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று ஊகிக்கப்படுகிறது மற்றும் நிறுவனம் இது தொடர்பான பல காப்புரிமைகளையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் முன்பி வெளியான எல்லா தகவல்களுக்கும், போல்டபிள் ஸ்மார்ட்போன் சார்ந்த நமது பேரார்வங்களுக்கும் அற்புதமான தீனிப்போடும் தகவல்கள் தற்போது சிக்கியுள்ளன.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

காப்புரிமை

ஒரு சில நாட்களுக்கு முன்பு,சாம்சங் ஒரு இயந்திர கீல் ஆதரவு கொண்ட ஒரு நெகிழ்வான டிஸ்ப்ளே கொண்ட ஒரு காப்புரிமையாய் தாக்கல் செய்திருக்கிறது என்கிறது ஒரு அறிக்கை.

கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ்

அந்த அறிக்கையின்கீழ் அக்கருவிகள் கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் போல்டபிள் ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் மற்றும் நிறுவனத்தின் முதல் மடங்கக்கூடிய போன்கள் இந்த 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்படலாம் என்றும் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

வெளியான தகவலின்படி கேலக்ஸி எக்ஸ்1 கருவியானது ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஸ்மெல்லோ கொண்டடு இயங்கும் என்று கூறப்படுகிறது, உடன் கேலக்ஸி எக்ஸ் 1 ப்ளஸ் கருவி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு புதுப்பிக்கப்படும் என்று தெரிய வருகிறது.

இரண்டாம் நிலை

சாம்சங் தாக்கல் செய்த காப்புரிமை அடிப்படையில் பார்த்தல் கேலக்ஸி எக்ஸ் கருவியில் ஒரு இரண்டாம் நிலை அல்லது நெகிழ்வான டிஸ்ப்ளே இடம்பெறும். மேலும் காப்புரிமையின் படி, இந்த இரண்டாம் திரையானது சாதனம் மடிக்கப்படும் போதெல்லாம் இயங்க வேண்டும்.

ஹோம் பொத்தான்

இந்த கருவி பயனர்களை மடக்க அனுமதிக்கும் என்பதால் இதை 'ப்ளிப் டிசைன்' உடன் ஒப்பிடலாம். இந்த நெகிழ்வான ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஹோம் பொத்தான் இருப்பதாக தெரிகிறது.

வெளிப்புறமாக மடியும்

மற்றொரு சமீபத்திய கசிவானது சாம்சங் நிறுவனத்தின் நெகிழ்வான டிஸ்ப்ளே தொலைபேசிகள் வெளிப்புறமாக மடியும் வண்ணம் ஒரு டிஸ்ப்ளே அமைப்பு இடம்பெறும் என்று சுட்டிக்காட்டுகிறது. அந்த கருவி முழுமையாக விரிவடைந்தால் ஒரு 7 அங்குல டேப்ளெட் போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உற்பத்தி

சாம்சங் நிறுவனத்தின் நெகிழ்வான ஸ்மார்ட்போன் வெளியீடானது இந்த மாதம் கழிந்த பின்னர் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஒரு சமீபத்திய அறிக்கை அதை உறுதி செய்யும் வண்ணம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் இக்கருவிகள் சார்ந்த உற்பத்தி நடக்கும் என்று கூறுகிறது.

மிகவும் சுவாரசியம்

இக்கருவிகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தான் பார்க்க மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கக்கூடும். இப்போது வரை, நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான அம்சங்களும் தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Samsung Galaxy X1 and X1 Plus foldable smartphones: What we know so far. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்