வேகமான பிராஸசரை கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

ஃபாஸ்ட் பிராஸசர் போன்கள் எவை எவை?

By Siva
|

இன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்காத மக்களே உலகில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட உள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த டெக்னாலஜி இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

வேகமான பிராஸசரை கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

அதே நேரத்தில் ஒரு ஸ்மார்ட்போன் என்பது நல்ல பவர் உள்ள பேட்டரி மற்றும் அசத்தலான கேமிரா மட்டும் இருந்தால் போதும், அதோடு நல்ல வேகமாக பிராஸசிங் இல்லை என்றால் அனைவரும் ஏமாற்றம் அடைவோம்.

ஆம், நாம் ஸ்மார்ட்போனில் முக்கிய பணியில் இருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடி கொண்டிருக்கும்போதோ, அல்லது திரைப்படங்கள் சுவாரஸியமாக பார்த்து கொண்டிருக்கும்போதோ, திடீரென ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆனால் நாம் வெறுப்படைவோம் அல்லவா? இதற்கு காரணம், ஸ்மார்ட்போனில் உள்ள பிராஸசிங் குறைபாடே. நல்ல வேகமான, லேட்டஸ்ட் பிராஸசிங் உள்ள ஸ்மார்ட்போனில் மேற்கண்ட குறைபாடு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு

இந்த நிலையில் இன்று நாம் நல்ல வேகமான பிராஸசிங் உள்ள போன்கள் குறித்து பார்ப்போம். குறிப்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உருவான ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 838SoC கொண்ட சிப்செட் பிராஸசர் உள்ள போன்கள் எவை எவை என்பதை தற்போது பார்ப்போமா?

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+

சாம்சங் நிறுவனத்தின் S8 மற்றும் S8+ மாடல் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்தியாவில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் ரூ.57,900 மற்றும் ரூ.64,900 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகிறது.

அமெரிக்க சந்தையில் இந்த மாடல் எக்ஸினோஸ் 8895 SoC சிப்செட்டிலும், மற்ற நாடுகளில் ஸ்னாப்டிராகன் 835 SoC சிப்செட்டிலும் விற்பனை ஆகிறது.

மேலும் இந்த S8 மாடல் ஸ்மார்ட்போன் 5.8 இன்ஸ் QHD 1440P சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவையும், S8+மாடல் ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அதே ரெசலூசனையும் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளேவுக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் உள்ளது.

மேலும் இந்த போன்களின் ஹார்ட்வேர் பக்கம் சென்று பார்த்தோம் என்றால் 4GB ரேம் மற்றும் 64 GB இன்னர் மெமரியும், 256 GB மெமரி விரிவாக்கம் செய்யும் வகையில் டூயல் சிம் வகை போனாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மற்றும் S8+ ஆகிய இரண்டிலும் 12MP டூயல் பிக்சல்ஸ் மெயின் கேமிராவும், 8MP செல்பி கேமிராவும் உள்ளது. 4G VoLTe, புளூடூத் 5.0, C டைப் போர்ட், ஆகிய அம்சங்களுடன் 3000 mAh மற்றும் 3500mAh பேட்டரியையும் முறையே இந்த போன்கள் பெற்றுள்ளன.

சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்:

சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்:

சோனி நிறுவனத்தின் இந்த புதிய மாடலான சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம், சமீபத்தில் நடந்த MWC 2017 டெக்னாலஜி மாநாட்டில் IP68 ரேட்டிங்கை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாடிராகன் 835 SoC கொண்டிருப்பதோடு 4GB ரேம் அளவை கொண்டது. ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் ஓஎஸ் வகையை கொண்ட இந்த போன், புதிய மோஷன் ஐ டெக்னாலஜி இருப்பதால் ஸ்லோமோஷன் வீடியோ எடுக்கும் வசதியும் உண்டு. 3230 mAh பேட்டரி தன்மையுள்ள இந்த போனில் மிக வேகமாக டவுன்லோடு செய்யும் அம்சங்களும், யூஎஸ்பி C டைப் போர்ட் ஆகியவையும் உண்டு

சியாமி மி 6:

சியாமி மி 6:

சியாமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான இந்த சியாமி மி 6 மாடல் ஸ்மார்ட்போன் 5.15 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டதோடு FHD 1080P ரெசலூசனை கொண்டது. மேலும் ஸ்னாப்டிராகன் 838 SoC சிப்செட், 6GB ரேம் கொண்ட இந்த போனில் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் 128 GB வரை மெமரியை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த போனின் பேட்டரி 3350 mAh தன்மையை கொண்டுள்ளதால் ஒருநாள் முழுக்க சார்ஜ் நிற்கும் கியாரண்டி உள்ளது. மேலும் இந்த போனி 12MP டூயல் கேமிராவில் வைட் ஆங்கில் லென்ஸ் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. சியாமி மி மிக்ஸ் மாடல் போலவே செராமிக் வகையும் இந்த மாடலில் உண்டு

எல்ஜி G6:

எல்ஜி G6:

எல்ஜி நிறுவனத்தின் இந்த எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD 1440x2880 பிக்சல் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த போனில் 13 MP கொண்ட டூயல் பின்கேமிராவில் 4K வீடியோ எடுக்கலாம். இந்த வைட் ஆங்கிள் லென்ஸ் அற்புதமான படங்களை எடுக்க உதவும்.

மேலும் 5MP செல்பி கேமிராவிலும் இந்த வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 821 குவட்கோர் பிராஸசரை கொண்டது. மேலும் இதில் 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜை கொண்டதோடு மேலும் மெமரியை விரிவாக்கும் வசதியும் உண்டு. 3300 mAh தன்மை கொண்ட இதன் பேட்டரி வேகமாக சார்ஜ் ஆக உதவும், இந்த புதிய மாடலின் விலை இந்தியவில் ரூ.51,990 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ்:

கடந்த ஆண்டு வெளியான ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் மாடல் ஐபோன்கள் மிக வேகமாக இயங்கும் மாடல்களில் ஒன்றாகும். ஆப்பிள் ஐபோன் 7 மாடலில் 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளேவும் ஆப்பிள் ஐபோன் 7பிளஸ் மாடலில் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவும் உள்ளது.

இரண்டு மாடல்களில் ஆப்பிள் A10 ஃபியுஷன் பிராஸருடன் 2GB ரேம் மற்ற்ம் 32/128/256 GB ஸ்டோரேஜ் கொண்ட கெப்பாசிட்டி மாடல்களில் உள்ளது. மேலும் இந்த மாடல்களில் 12MP பின்கேமிராவும், 7MP செல்பி கேமிராவும் உள்ளது. மேலும் புளூடூத் 4.2, LTEசப்போர்ட், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் ஆகிய சிறப்பு அம்சங்களும் இந்த மாடல்களில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Here is a list of smartphones that use fast processors and the models include Samsung Galaxy S8, Galaxy S8+, Sony Xperia XZ Premium, Apple iPhone 7, LG G6, and Xiaomi Mi 6.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X