தெறிக்க விடப்போகும் கேலக்ஸி எஸ்8 (அம்சங்கள், வெளியீடு).!

இந்த முறை தோல்வியை சந்திக்க சாம்சங் நிறுவனம் தயாராக இல்லை என்பதை எஸ்8 கருவியின் கூடுதல் சிறப்பம்சங்கள் எடுத்துக்கூறுகின்றன.!

|

தீப்பிடிப்பு மற்றும் பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சிக்கி பிராண்ட் பெயரை கெடுத்துக்கொண்ட சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த கருவியான கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் தான் நிறுவனத்தின் தலையெழுத்து உட்பட எல்லாமே அடங்கியுள்ளது. நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவியாக வெளியாகப்போகும் எஸ்8 கருவியின் வெளியீடு எப்போது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட கூறப்படும் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 + சார்ந்த லீக்ஸ் தகவல்கள் அடங்கிய வண்ணம் இல்லை.!

தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் புகைப்படத்தின் மூலம் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய இரண்டு கருவிகளும் "வெறித்தனமான" வெற்றியை அடையும் நோக்கில் திறம்பட உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. உடன் வெளியான புதிய நேரடி வீடியோவானது கைபேசிகளின் முழு அம்சங்களையும் சேர்த்தே வெளிபப்டுத்தியுள்ளது.!

ஹோம் பொத்தான் இல்லை

ஹோம் பொத்தான் இல்லை

ஸ்லேஷ்லீக்ஸ் வெளியிட்டுள்ள இந்த புதிய லீக்ஸ் படத்தில் கருவியின் முன்பக்கத்தில் எந்த ஹோம் பொத்தான் வடிவமைப்பையும் காட்டவில்லை எனவே இது முன்பு வெளியான லீக்ஸ் தகவல்களுடன் ஒற்றுப்போகிறது.

நெட்வொர்க்

நெட்வொர்க்

மற்றும் இந்த புதிய கசிந்த படத்தின்கீழ் உள்நோக்குடன் திரையில் உள்ள நேவிகேஷன் பொத்தான்கள் மறுவடிவமைப்பு பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. உடன் இக்கருவிகள் ஏடி & டி (AT&T network) நெட்வொர்க் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய நேரடி வீடியோ

குறுகிய நேரடி வீடியோ

இந்த வீடியோவில் தனித்தனியாக ஒரு குறுகிய நேரடி வீடியோவாக சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோ சீனாவில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ரேம்

ரேம்

இக்கருவிகள் அம்சங்களை பொறுத்தமட்டில் கேலக்ஸி எஸ்8 அக்கருவி 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் கொண்டு சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று பரவலான வதந்தி நிலவுகிறது.

சேமிப்புத்திறன்

சேமிப்புத்திறன்

உடன் கைபேசியானது மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரையிலான ஆதரவு வழங்கும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விலை

விலை

மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது 3250எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 அதன் முன்னோடியை விட சுமார் ரூ. 7,300/- அதிகமான புள்ளியை சுற்றி அமையலாம்.

உறுதி

உறுதி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் வெளியீடு அடுத்த மாதம் அமைக்கப்படுகிறது. பார்சிலோனாவில்நடக்கும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் தென் கொரிய நிறுவனம் அதன் கேலக்ஸி வெளியீடு சார்ந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியது.

மார்ச் 29

மார்ச் 29

சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் வெளியீடு அடுத்த மாதம்,எ அதாவது மார்ச் 29-ஆம் தேதியன்று அமைக்கப்படுகிறது. பார்சிலோனாவில்நடக்கும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் தென் கொரிய நிறுவனம் அதன் கேலக்ஸி வெளியீடு சார்ந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. முந்தைய அறிக்கைகளின்படி இக்கருவிகள் ஏப்ரல் 21 போல விற்பனைக்கு வரும் என்று குறிப்பிடுகின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.12,200 முதல் இந்தியாவில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோனின் மாடல்கள்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 Working Unit Spotted in Images, Video Ahead of March 29 Launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X